Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
April 7, 2017
in கார் செய்திகள்

மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ரூபாய் 5.36 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டாப்  ஆஸ்டா வேரியன்டில் இருவிதமான இருவண்ண கலவை ஆப்ஷனுடன் வந்துள்ளது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20

  • சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கருப்பு வண்ண மேற்கூறையுடன் வந்துள்ளது.
  • எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை
  • இன்டிரியரில் கூடுதல் வசதிகளுடன் பெற்றதாக ஐ20 வந்துள்ளது.

எலைட் ஐ20 காரின் எஞ்சின் விபரம்…,

100 hp பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் VTVT பெட்ரோல் எஞ்சின் மாடலில் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இதன் டார்க் 130 Nm ஆகும். 5 மேனுவல் பெட்ரோல் மாடலில் 83 hp ஆற்றலுடன் , 115 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா எஞ்சின் மாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

89 bhp ஆற்றலுடன் , 220 Nm டார்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் CRDi டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

புதிதாக வந்துள்ள மேம்படுத்தப்பட்ட எலைட் ஐ20 மாடலில் புதிய நீல நிறம் சேர்க்கப்பட்டு கூடுதலாக சிவப்பு மற்றும் வெள்ளை நிற மாடல்களுடன் கருப்பு நிற மேற்கூறையை பெற்று இரட்டை வண்ண கலவை அம்சத்தை பெற்றதாக கிடைக்கின்றது.

மேம்படுத்தப்பட்ட இன்டிரியர் அமைப்பில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட டேஸ்போர்டினை பெற்றிருப்பதுடன் ஆரஞ்சு நிற இன்ஷர்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் டாப் ஆஸ்டா (O) வேரியன்டில் புதிய 7 இஞ்ச் அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளும் மிரர்லிங்க் ஆதரவும் இடம்பெற்றுள்ளது.

2017 Hyundai i20  1.2 பெட்ரோல் 1.4 டீசல் 1.2 பெட்ரோல் ஆட்டோ
Era ரூ.5,36,624 ரூ.6,66,729 –
Magna Executive ரூ.5,99,990 ரூ.7,22,198 ரூ.9,09,064
Sportz ரூ.6,47,209 ரூ.7,69,197 –
Asta ரூ.7,00,623 ரூ.8,26,464 –
Asta (O) ரூ.7,83,065 ரூ.9,07,235 –
Asta Dual Tone ரூ.7,25,624 ரூ.8,51,465 –

அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் பட்டியல்

Tags: Hyundaiஎலைட் ஐ20
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version