போக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் போக்ஸ்வேகன் நிறுவனம் போலோ ஆல்ஸ்டார் காரினை ரூ.7.51 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சாதரன போலோ காரின் ஹைலைன் ட்ரீம் வேரியன்டை அடிப்படையாக கொண்டதாகும்.

சமீபத்தில் போக்ஸ்வேகன் அதிகார்வப்பூர்வ இணையத்தில் வெளியான ஆல்ஸ்டார் விபரங்களை தொடர்ந்து பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆல்ஸ்டார் வெளிவந்துள்ள நிலையில் போலோ ஆல்ஸ்டார் விலை விபரம்

( அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மும்பை விலை )

எமியோ காரில் இடம்பெற்றுள்ள புளூ சில்க் வண்ணத்தில் வெளியாகியுள்ள போலோ ஆல்ஸ்டார் காரின் தோற்றத்தில் 15 இன்ச் அலாய் வீல் , ஆல்ஸ்டார் பேட்ஜ் ஆனது பி -பில்லர் மற்றும் ஸ்க்ஃப் பிளேட்டில் இடம்பெற்றுள்ளது. உட்புறத்தில் கூடுதலான ஏர்கான் வென்ட்ஸ் பின்புறம் , புதிய அப்ஹோல்ஸ்ட்ரி ,பிரெனட் ஆர்ம்ரெஸ்ட் , மெட்டாலிக் பினிஷ் செய்யப்பட்ட பெடல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

சாதரன போலோ காரை விட கூடுதலாக ரூ.30000 விலையில் சில தோற்ற மாற்றங்கள் மற்றும் வசதிகளை பெற்றுள்ளது.1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் போன்றவற்றில் மாற்றங்கள் இல்லை.

Exit mobile version