Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திரா பொலிரோ பவர்+ விற்பனைக்கு வந்தது

by MR.Durai
14 September 2016, 8:27 am
in Car News
0
ShareTweetSend

இந்தியாவின் யுட்டிலிட்டி ரக வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பொலிரோ எஸ்யூவி காரின் மஹிந்திரா பொலிரோ பவர்+ மாடலை கூடுதல் பவர் மற்றும் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ஸ்டாண்டர்டு பொலிரோ மாடலை விட ரூ. 1 லட்சம் விலை குறைவாக வெளியிடப்பட்டுள்ள புதிய மஹிந்திரா பொலிரோ பவர் + மாடலில் 1493 சிசி எம்ஹாக்70 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  எம்ஹாக்70 என பெயரிடப்பட்டுள்ள 1.5 லிட்டர் இன்ஜின் ஆற்றல் 71 hp மற்றும் டார்க் 190Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சாதரன வேரியண்டை விட சுமார் 112மிமீ குறைவான நீளத்தை பெற்று 3995 மிமீ நீளமும் , 1745 மிமீ அகலமும் மற்றும் 1880மிமீ உயரத்தை பெற்றுள்ளது. உட்புறத்தில் எந்த மாற்றங்களும் வீல்பேஸ் போன்றவற்றில் செய்யாமல் காரின் நீளத்தை மட்டுமே குறைத்து 4 மீட்டருக்கு குறைவான காராக மாற்றி 1.5 லிட்டர் இன்ஜின் பெற்று வரி சலுகை பெற்றுள்ளதால் சாதரன மாடலை விட 1 லட்சம் விலை குறைந்துள்ளது.

முன் மற்றும் பின்பக்க பம்பர் தோற்றங்களில் சில மாற்றங்களுடன் பெரும்பாலான தோற்றஅமைப்பு மற்றும் இன்டிரியர் வசதிகள் போன்றவற்றில் மாற்றங்கள் பெரிய அளவில் இல்லாமல் 7 இருக்கை ஆப்ஷனுடன் விளங்குகின்றது. SLE, SLX மற்றும் ZLX என மூன்று விதமான வேரியண்டில் கிடைக்க உள்ள பொலிரோ பவர் ப்ளஸ் மாடலின் டாப் ZLX வேரியண்டில் பூளூடூத் , யூஎஸ்பி , ஆக்ஸ் சிடி தொடர்புகளுடன் கூடிய ஆடியோ பிளேயர் மற்றும் மஹிந்திர மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் உள்ள பொலிரோ காரின் விற்பனை கடந்த சில மாதங்களாக சரிந்துள்ள நிலையில் 4 மீட்டருக்கு குறைவான மாடலாக விற்பனைக்கு வந்துள்ளதால் நகர்புற சந்தையிலும் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

மஹிந்திரா பொலிரோ பவர் + விலை ரூ .6.59 லட்சம் முதல் 7.57 லட்சம் வரை உள்ளது. (எக்ஸ்ஷோரூம் மும்பை விலை)

 

Related Motor News

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hyundai venue n-line suv front

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

hyundai venue suv

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ் திட்டம்.!

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது

ஹோண்டா இந்தியாவில் வெளியிட உள்ள 0 α (Alpha) எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

உலகின் ஆடம்பர கார்களில் மற்றொரு அடையாளம் ”டொயோட்டா செஞ்சூரி”

நவம்பர் 25ல் மீண்டும் டாடா Sierra எஸ்யூவி சந்தைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan