மாருதி சுசூகி எர்டிகா காரின் விலை ரூ. 62,000 வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. மாருதி எர்டிகா எம்பிவி காரின் டீசல் மாடலில் எஸ்ஹெச்விஎஸ் ஹைபிரிட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் விலை சரிந்துள்ளது.
மத்திய அரசு ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கான வரியை 24 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் காரணமாகவே மாருதி எர்டிகா டீசல் ஹைபிரிட் காரின் விலை ரூ.51000 முதல் ரூ.62,000 வரை விலை சரிவினை சந்தித்துள்ளது.
88.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள SHVS மினி ஹைபிரிட் சிஸ்டம் ஸ்டார்ட்டர் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரேக் செய்யும் பொழுது ஆற்றலை சேமித்து பயன்படுத்தவும் மற்றும் தானியங்கி முறையில் எஞ்ஜின் அனைந்து இயங்கி கூடுதல் எரிபொருள் சிக்கனத்தினை கொடுக்கவல்லதாகும். மாருதி சியாஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.42 கிமீ ஆகும்.
மாருதி எர்டிகா டீசல் விலை பட்டியல்
Maruti Ertiga LDi – ரூ. 7.08 லட்சம்
Maruti Ertiga LDi (O) – ரூ.7.14 லட்சம்
Maruti Ertiga VDi – ரூ.7.74 லட்சம்
Maruti Ertiga ZDi – ரூ.8.26 லட்சம்
Maruti Ertiga ZDi+ – ரூ.8.66 லட்சம்
{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் }