மாருதி சுசூகி இக்னிஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள மாருதி சுசூகி இக்னிஸ் க்ராஸ்ஓவர் கார் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விபரங்களை பற்றி இந்த பகிர்வில் காணலாம்.

 

கடந்த 2016 டெல்லிஆட்டோ எக்ஸ்போவில் இந்திய சந்தைக்கான மாடல் காட்சிக்குவெளிப்படுத்தப்பட்டது. தற்பொழுது பல்வேறு கட்டங்களாக தீவரமான சாலை சோதனை ஓட்டத்தில் உள்ள மாருதி இக்னிஸ் 4 மீட்டருக்கு குறைவாக அமைந்துள்ளது. மாருதி பிரிமியம் டீலர்களான நெக்‌ஸா வழியாக இக்னிஸ் விற்பனை செய்யப்பட உள்ளது. தற்பொழுது ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மாருதி சுசூகி இக்னிஸ்

1. காம்பேக்ட் க்ராஸ்ஓவர் : மஹிந்திரா KUV100 மினி காம்பேக்ட் எஸ்யூவி காரருக்கு நேரடியான போட்டி மாடலாக எதிர்பார்க்கப்படும் இக்னிஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினும் பெற்றிருக்கும்.

2. பலேனோ, ஸ்விஃப்ட் போன்ற கார்களில் இடம்பெற்றுள்ள 83 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் என இரு என்ஜினிலும் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் அதாவது மாருதி ஏஜிஎஸ் கியர்பாக்ஸ்இடம்பெற்றிருக்கும்.

3. தோற்றம் ; வித்தியாசமான ஜப்பான் டிசைன் தாத்பரியத்தில் பாக்ஸ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்னிஸ் கார் எஸ்யுவி வடிவ தாத்பரியங்களை கொண்டு மாருதியின் மற்ற கார்களிலிருந்து வித்தியசமான ஸ்டைலிங் அம்சத்தை பெற்ற மாடலாக கவர்ச்சியாக விளங்குகின்றது.

4. உட்புறம் இன்டிரியரில் சிறப்பான இடவசதி கொண்ட மாடலாக விளங்கும் வகையில் 2438மிமீ வீல்பேஸ் பெற்றுள்ளதால் தாரளமான இடவசதியுடன் தொடுதிரை ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஸ்மார்ட்போன் ஆதரவுடன் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே , ரிவர்ஸ் கேமரா , பார்க்கிங் சென்சார்கள் ,  இருவண்ண கலவையில் டேஸ்போர்டு , புதிய ஸ்டீயரிங் வீல் போன்றவை பெற்றிருக்கும்.

5. வேரியன்ட் விபரம்

நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்பட்ட பலேனோ மற்றும் எஸ்-க்ராஸ் கார்களை போலேவே சிக்மா , டெல்டா , ஜெட்டா மற்றும் ஆல்ஃபா என மூன்று வேரியண்ட்களை கொண்டுள்ளது.

6. சிறப்பு வசதிகள்

இக்னிஸ் டாப் வேரியன்டான ஆல்ஃபா மாடலில் புராஜெக்டர் ஹெட்லேம்ப் ,  பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் , 15 அங்குல அலாய் வீல் போன்றவற்றுடன் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் வசதியை பெற்றிருக்கும். பேஸ் வேரியன்டான டெல்டா மாடல்களில் 2 டின் ஆடியோ சிஸ்டம் மற்றும் 15 அங்குல ஸ்டீல் வீல் பெற்றிருக்கும்.

7.பாதுகாப்பு அம்சம்

வருகின்ற அக்டோபர் 2017 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப முன்பக்க இரு காற்றுப்பை ,  ஏபிஎஸ் போன்றவை நிரந்தர அம்சமாக இருக்கும்.

8. போட்டியாளர்கள்

மினி எஸ்யூவி காரான மஹிந்திரா கேயூவி100 காருக்கு நேரடியான போட்டியாக அமையுள்ள இக்னிஸ் காரானது எலைட் ஐ20 ஏக்டிவ் , ஃபியட் அவென்ச்சூரா , அர்பன் க்ராஸ் மற்றும் ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கும் சவாலாக அமையும்

9.  இக்னிஸ் கார் விலை பட்டியல்

மாருதி இக்னிஸ் காரின் முழுமையான விலை பட்டியல் (டெல்லி எக்ஸ்ஷோரூம் )

இக்னிஸ் சிக்மா – ரூ.4.59 லட்சம்

இக்னிஸ் டெல்டா – ரூ.5.19 லட்சம்

இக்னிஸ் ஜெட்டா – ரூ.5.75 லட்சம்

இக்னிஸ் ஆல்ஃபா – ரூ.6.69 லட்சம்

பெட்ரோல் ஏஎம்டி

இக்னிஸ் டெல்டா – ரூ.5.74 லட்சம் (ஏஎம்டி)

இக்னிஸ் ஜெட்டா – ரூ.6.30 லட்சம் (ஏஎம்டி)

மாருதி இக்னிஸ் டீசல் விலை பட்டியல்

இக்னிஸ் டெல்டா – ரூ. 6.39 லட்சம்

இக்னிஸ் ஜெட்டா – ரூ. 6.91 லட்சம்

இக்னிஸ் ஆல்ஃபா – ரூ. 7.80 லட்சம்

டீசல் ஏஎம்டி

இக்னிஸ் டெல்டா – ரூ.6.94 லட்சம் (ஏஎம்டி)

இக்னிஸ் ஜெட்டா – ரூ.7.46 லட்சம் (ஏஎம்டி)

Share