Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி சுஸூகி பலேனோ விற்பனைக்கு வந்தது

by MR.Durai
26 October 2015, 7:40 am
in Car News
0
ShareTweetSend

Related Motor News

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

சிம்பிள் எனர்ஜியின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட மேக்னட் இல்லாத மோட்டார்.!

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார் ரூ.4.99 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்தது. மாருதி சுஸூகி பலேனோ சிவிடி மற்றும் மெனுவல் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வந்துள்ளது.

மாருதி சுஸூகி பலேனோ

மாருதி நெக்ஸா பிரிமியம் டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள பலேனோ காரில் பல நவீன அம்சங்களுடன்  ஆப்பிள் கார் பிளே செயலியுடன் வந்துள்ள முதல் B+ ஹேட்ச்பேக் காராகும்.

தோற்றம்

பலேனோ கார் சிறப்பான தோற்றத்துடன் வி வடிவ முன்பக்க கிரிலுடன் இணைந்துள்ள பகல்நேர எல்இடி விளக்குகள் அழகாக உள்ளது. முன்பக்கத்தில் புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகளை கொண்டுள்ளது. பக்கவாட்டில் டாப் மாடலில் 16 இஞ்ச் அலாய் வீல் மற்றவையில் 15 இஞ்ச் வீலை பெற்றுள்ளது. பின்பக்கத்தில் எல்இடி டெயில் விளக்குகள் மற்ற்உம் ரூஃப் ஸ்பாயல்ர் போன்றவை சிறப்பான தோற்றத்தினை பலேனோ காருக்கு வழங்கியுள்ளது.

பலேனோ கார்

ரே நீலம் , ஃபயர் சிவப்பு , பிரிமியம் சிலவர் , ஆரஞ்ச் , அர்பன் நீலம் , வெள்ளை மற்றும் கிரே என மொத்தம் 7 வண்ணங்களில் பலேனோ கார் கிடைக்கின்றது.

உட்புறம்

மிக நேரத்தியான் இன்டிரியர் கருப்பு வண்ணத்தில் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டு அழகான தோற்றத்தினை பெற்றுள்ளது. டேஸ்போர்ட் சென்டர் கன்சோலில் தொடுதிரை அமைப்புடன் கூடிய ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி சுஸூகி பலேனோ

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பொத்தான்கள் , ஆப்பிள் கார்பிளே , நேவிகேஷன் யூஎஸ்பி , ஆக்ஸ், பூளூடூத் போன்றவை உள்ளது. கீலெஸ் என்ட்ரி , ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா போன்றவை உள்ளது. பலேனோ காரின் பூட்ஸ்பேஸ் 339 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.

மாருதி சுஸூகி பலேனோ

என்ஜின்

மாருதி பலேனோ காரின் 83.1பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் K12 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் சிவிடி என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வந்துள்ளது.

பலேனோ காரின் 73.9 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.3லிட்டர் மல்டிஜெட் DDiS190 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பலேனோ காரின் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 27.31 கிமீ மற்றும் மாருதி பலேனோ காரின் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 21.4 கிமீ ஆகும்.

பலேனோ சிவிடி
பலேனோ சிவிடி

பலேனோ சிறப்பம்சங்கள்

முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ், இபிடி , இருக்கை பட்டை பீரி டென்சனர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சமாக உள்ளது. மேலும் நவீன அம்சங்களான ஆப்பிள் கார்பிளே , நேவிகேஷன் யூஎஸ்பி , ஆக்ஸ் பூளூடூத் போன்றவை உள்ளது.

பலேனோ இன்ஃபோடெயின்மென்ட்
பலேனோ இன்ஃபோடெயின்மென்ட்
பலேனோ காரின் போட்டியாளர்கள்

மாருதி பலேனோ காருக்கு  எலைட் ஐ20 , ஹோண்டா ஜாஸ் , போலோ போன்ற கார்கள் மிகுந்த சவாலினை தரும்.

மாருதி சுசூகி பலேனோ கார் விலை

பலேனோ பெட்ரோல் மாடல்

சிக்மா : ரூ.4.99 லட்சம்
டெல்டா :ரூ.5.71 லட்சம்
ஜெட்டா : ரூ.6.31 லட்சம்
ஆல்ஃபா : ரூ.7.01 லட்சம்
சிவிடி : ரூ.6.76 லட்சம்

பலேனோ டீசல் மாடல்

சிக்மா : ரூ.6.16 லட்சம்
டெல்டா : ரூ.6.81 லட்சம்
ஜெட்டா : ரூ.7.41 லட்சம்
ஆல்ஃபா ; ரூ.8.11 லட்சம்

அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை

மாருதி பலேனோ
மாருதி சுஸூகி பலேனோ காரின் பிரவுச்சர்
மாருதி சுஸூகி பலேனோ காரின் பிரவுச்சர்

மாருதி சுஸூகி பலேனோ காரின் பிரவுச்சர்
Maruti Suzuki Baleno launched in India
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

amaze Crystal Black Pearl’ colour

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan