மெர்சிடிஸ் பென்ஸ் S400 விற்பனைக்கு வந்தது

ரூ.1.31 கோடி விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் S400 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  S250d மற்றும் S500 கார்களுக்கு இடையில் பென்ஸ் எஸ்500 கார் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் 15 கார்களை விற்பனைக்கு கொண்டு வந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருடத்தில் 12 கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்தியாவில் மொத்தம் 8 எஸ் கிளாஸ் வரிசை கார்கள் விற்பனையில் உள்ளது. 9வது காராக எஸ்400 செடான் கார் வந்துள்ளது.

எஸ் கிளாஸ் கார்களின் பாரம்பரிய முகப்பு தோற்றத்தினை கொண்டுள்ள எஸ்400 கார் லிமோசின் கார்களை போல மிக நீளமாக உள்ளது. மிக நேர்த்தியான முகப்பு விளக்குகளுடன் கூடிய பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது.

உட்புறத்தில் எஸ் கிளாஸ் கார்களுக்கு உரித்தான சொகுசு வசதிகளுடன் நவீன வசதிகளை கொண்ட டேஸ்போர்டு , மஸாஜ் வசதிகளை கொண்ட இருக்கைகள் , 7 விதமான வண்ணங்களில் ஆம்பியண்ட் லைட்டனிங் , சூரிய மேற்கூறை , 1500வாட்ஸ் 24 ஒலிப்பெருக்கிகளை கொண்ட புர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் , 4 விதமான ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்றவற்றை பெற்றுள்ளது.

3.0 லிட்டர் வி6 ட்வீன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 329bhp ஆற்றலை வெளிப்படுத்தும் . இதன் இழுவைதிறன் 480 Nm ஆகும். இதில் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் S400 கார் விலை ரூ. 1.31 கோடி ஆகும் ( எக்ஸ்ஷோரூம் ஹைத்திராபாத் )

 

Exit mobile version