மெர்சிடிஸ் AMG C63 S காரின் பெர்ஃபாமென்ஸ் மாடல் ரூ.1.30 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சி கிளாஸ் செடான் காரை மெர்சிடிஸ் ஏஎம்ஜி C63 S மாடலாக வந்துள்ளது.

மெர்சிடிஸ் AMG C63 S

மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் 2015ம் ஆண்டில் 15 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 11வது மாடலாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி C63 S கார் வந்துள்ளது.

சி கிளாஸ் மாடலில் இருந்து மாறுபட்ட தோற்றத்தினை வெளிப்படுத்தும் வகையில் ஏஎம்ஜி கிட்களை பெற்றுள்ளது.

503பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் V8 ட்வீன் டர்போ 4.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 700என்எம் ஆகும். இதில் 7 ஸ்பீட்ஷீஃப்ட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 எஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக எலக்ட்ரானிக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது. 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு வெறும் 4 விநாடிகளை எடுத்துக்கொள்ளும்.

ஏஎம்ஜி சி63 எஸ் காரின் போட்டியாளராக பிஎம்டபிள்யூ எம்3 விளங்கும்.

மெர்சிடிஸ் AMG C63 S காரின் விலை ரூ.1.30 கோடி (ex-showroom, Delhi)

Mercedes-AMG C63 S Launched In India