இந்தியாவின் மிக குறைந்த விலை பெர்ஃபாமென்ஸ் ரக செடான் கார் மாடலாக ஸ்கோடா ஆக்டாவியா RS கார் ரூ. 24.62 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 230hp பவரை வெளிப்படுத்தும் எஞ்சினை ஆக்டாவியா ஆர்எஸ் வெளியிடப்பட்டுள்ளது.
சாதாரண ஆக்டாவியா காரின் தோற்ற அமைப்பிலிருந்து வித்தியாசப்படுத்தும் வகையில் முகப்பில் vRS பேட்ஜ் உடன் கூடிய கருப்பு நிற கிரிலுடன் கூடியதாக க்ரோம் பூச்சூ கொண்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகளுடன் கூடிய இந்த காரின் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் 19 அங்குல அலாய் வீல் பெற்றதாக கிடைக்கின்றது.
இன்டிரியரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் மிரர்லிங்க்,டிரைவர் அசிஸ்ட் ஆகியவற்றுடன் 9 காற்றுப்பைகள், இஎஸ்பி உடன் கிடைக்கின்றது.
முந்தைய 1.8 லிட்டர் எஞ்சினுக்கு மாற்றாக புதிய டர்போ-சார்ஜ்டு 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 230hp பவரை வெளிப்படுத்துவதுடன் 350Nm டார்க்கினை வழங்குகின்றது. முன்புற சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
சாதாரண ஆக்டாவியா செடான் கார் ரூ.15.49 லட்சம் முதல் ரூ. 22.90 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் ஸ்கோடா ஆக்டாவியா RS கார் விலை ரூ.24.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும்.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…