டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக வரவுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி காரின் படங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான டிசைன் அம்சத்தை பெற்றுள்ள இந்த கார் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

எக்ஸ்டெர் மாடலின் இன்டிரியரின் வசதிகள் பற்றி எந்த படமும் வெளியாகவில்லை. இந்த காருக்கான இன்டிரியர் வெனியூ காரிலிருந்து பெற்றிருக்கலாம்.

Hyundai Exter

வரவிருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டெர் எஸ்யூவி காரில் முரட்டுதனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் கிரிலுடன் பாக்ஸ் ஸ்டைலை போல தெரிகிறது. நேர்த்தியான கிரில் அமைப்புடன் எல்இடி ஹெட்லைட் செவ்வக வடிவத்த்திலும் அதற்கு மேலே எல்இடி ரன்னிங் விளக்குகள் எச் வடிவத்தை கொண்டுள்ளது. கீழ் முன் பம்பரில் ஸ்கிட் பிளேட் மற்றும் கனமான டூயல்-டோன் கிளாடிங்கை கொடுத்துள்ளது.

எக்ஸ்டர் எஸ்யூவி காரில் 81 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பலாம். சிஎன்ஜி ஆப்ஷனிலும் கூடுதலாக எதிர்பார்க்கப்படுகின்றது.  டாப்-ஸ்பெக் வேரியண்டில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு குதிரைத்திறன் 99 bhp மற்றும் 172 Nm டார்க் வழங்கும்.

விற்பனையில் உள்ள டாடா பஞ்ச், சிட்ரோன் C3, ரெனால்ட் கிகர் மற்றும் நிசான் மேக்னைட் உள்ளிட்ட எஸ்யூவிகளை எதிர்கொள்ள உள்ள எக்ஸர் விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் எக்ஸ்டர் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அமையலாம்.