ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி ரூ.8.59 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. க்ரெட்டா எஸ்யுவி மிக சவலான விலையில் இந்திய எஸ்யுவி சந்தையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடங்கப்பட்ட சில வாரங்களில் 28,500 க்கு மேற்பட்ட விசாரிப்புகளுடன் 15,000த்திற்க்கு மேற்பட்ட முன்பதிவுகளை கடந்துள்ள க்ரெட்டா எஸ்யுவி விற்பனைக்கு வந்துள்ளது.
தோற்றம்
சிறிதாக கம்பீரமான தோற்றத்தினை கொண்ட க்ரெட்டா எஸ்யுவி இந்திய வாடிக்கையாளர்களை மிக விரைவாக கவர்ந்துள்ளது. மூன்று சிலவர் ஸ்லாட்களுக்கு மத்தியில் ஹூண்டாய் லோகோ பதிக்கப்பட்டுள்ளது.
செங்குத்தான நிலையில் பனி விளக்குகள் , புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர விளக்குகளை கொண்டுள்ளது.
பக்கவாட்டில் 16 இஞ்ச் சில்வர் ஆலாய் வீல் மற்றும் 17 இஞ்ச் டைமன்ட் கட் ஆலாய் வீலை பெற்றுள்ளது.
பின்புறத்தில் பதிவென் பிளேட்டுக்கு மேல் குரோம் பட்டை எல்இடி டெயில் விளக்குகள் உள்ளது. 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.
உட்புறம்
இரட்டை வண்ண பிரிமியம் தோற்றத்தில் உள்ள இன்டிரியர் 5 இஞ்ச் மற்றும் 7 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , ஸடீயரிங் வீலில் ஆடியோ மற்றும் போன் கட்டப்பாடு பொத்தான்கள் , யூஎஸ்பி , ஆக்ஸ் , பூளூடூத் தொடர்பு , டாப் வேரியண்டில் சில்வர் இன்சர்ட் , லெதர் இருக்கைகள் பெற்றுள்ளன.
என்ஜின்
120பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் டார்க் 155என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 15.29கிமீ ஆகும்.
87பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 220என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.38கிமீ ஆகும்.
125பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 259என்எம் ஆகும் . இதன் மெனுவல் மைலேஜ் லிட்டருக்கு 19.67கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 17.01கிமீ ஆகும்.
மேலும் வாசிக்க ; க்ரெட்டா கார் வெற்றி பெறுமா ?
பாதுகாப்பு வசதிகள்
க்ரெட்டா எஸ்யுவி காரில் ஏபிஎஸ் , டில்ட் ஸ்டீயரிங் அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சமாக உள்ளது. ரியர் கேமரா , விபத்தின் பொழுது தானாக திறந்துகொள்ளும் கதவுகள், இரட்டை காற்றுப்பைகள் உள்பட பக்கவாட்டு மற்றும் கர்டைன் காற்றுப்பைகளை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.
க்ரெட்டா விலை விபரம் (ex-showroom Delhi)
க்ரெட்டா பெட்ரோல்
1.6 Base: ரூ. 8.59 லட்சம்
1.6 SX: ரூ.9.57 லட்சம்
1.6 SX+: ரூ.11.19 லட்சம்
க்ரெட்டா 1.4 டீசல்
1.4 Base: ரூ. 9.46 லட்சம்
1.4 S: ரூ. 10.42 லட்சம்
1.4 S+: ரூ.11.45 லட்சம்
க்ரெட்டா 1.6 டீசல்
1.6 SX: ரூ 11.59 லட்சம்
1.6 SX+: ரூ.12.68 லட்சம்
1.6 SX (O): ரூ 13.60 லட்சம்
க்ரெட்டா 1.6 டீசல் ஆட்டோமேட்டிக்
1.6 SX+ Auto: ரூ. 13.57 லட்சம்
Hyundai Creta launched in India