Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

வோக்ஸ்வேகன் எமியோ , வென்ட்டோ , போலோ கார்களில் சிறப்பு பதிப்பு

By MR.Durai
Last updated: 3,December 2016
Share
SHARE

 

இந்தியாவின் வோக்ஸ்வேகன் நிறுவனம் க்ரெஸ்ட் என்ற பெயரில் சிறப்பு பதிப்பு மாடலை வோக்ஸ்வேகன் எமியோ , வென்ட்டோ , போலோ கார்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. க்ரெஸ்ட் பதிப்பில் தோற்றம் மற்றும் இன்டிரியரில் கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளது.

சமீபத்தில் விற்பனைக்கு வெளியான எமியோ காரிலும் சிறப்பு எடிசன் வெளியாகியுள்ளது. க்ரெஸ்ட் சிறப்பு எடிசனில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் வருகின்ற புதிய வருடத்தை ஒட்டி சிறப்பு மாதாந்திர கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரெஸ்ட் எடிசன் மாடலின் விலை சாதரன மாடல்களை விட ரூ.3000 முதல் 25,000 வரை கூடுதலாக அமைந்திருக்கும். எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கிடைக்க உள்ளது.

க்ரெஸ்ட் ஸ்பெஷல் எடிசன்

ஃபோக்ஸ்வேகன் க்ரெஸ்ட் எடிசன் மாடலின் நோக்கமானது வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் அனுபவத்தினை வழங்கும் வகையிலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிறப்பிடமாக விளங்கும் ஜெர்மனி நாட்டின் வோல்ஸ்பெர்க் பிரைட் பேட்ஜ் (Wolfsburg crest) ஆனது சி பில்லரில் பதிக்கப்பட்டுள்ளது.  முதன்முறையாக வோல்ஸ்பெர்க் பிரைட் க்ரெஸ்ட் பேட்ஜ் ஒரிஜினல் பீட்டல் காரில் 1945 ஆம் ஆண்டில் பதிக்கப்பட்டது.

மூன்று மாடல்களின் வெளிதோற்றத்தில் இடம்பெற்றுள்ள வசதிகள்

  • வோல்ஸ்பெர்க் க்ரெஸ்ட் சி பில்லர் பகுதியில்
  • மேட் கருப்பு வண்ண மேற்கூறை
  • வோக்ஸ்வேகன் சைட் ஃபாயில்
  • கருப்பு வண்ண டெயில்கேட்/டிரங்க் கார்னிஷ் (போலோ/எமியோ)
  • போலோ காரில் கருப்பு வண்ண ரூஃப் ஸ்பாய்லர்
  • வென்ட்டோ காரில் கருப்பு வண்ண பூட் லிட் ஸ்பாய்லர்

இன்டிரியர் டிசைன் அம்சங்கள்

  • நேர்த்தியான கால் மிதியடிகள்
  • பீஜ் வண்ண லெதர் இருக்கை கவர்கள்
  • வோல்ஸ்பெர்க் க்ரெஸ்ட் பேட்ஜ் இருக்கையில்
  • முன்பக்க இருக்கைக்கு ஆர்ம் ரெஸ்ட்
  • டோர் சில்

போலோ மற்றும் எமியோ கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் , வென்ட்டோ காரில் 1.6 லிட்டர் MPI, 1.2 TSI பெட்ரோல் மற்றும் 1.5 TDI டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

ஃபோக்ஸ்வேகன் க்ரெஸ்ட் எடிசன் படங்கள்

 

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:VolksWagen
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
xtreme 160r 4v
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ola roadster x plus electric bike
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X+ எலெக்ட்ரிக் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்புகள்
All new TVS Jupiter 110 2 1
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved