Automobile Tamilan

2016 மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் விற்பனைக்கு வந்தது

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் E கிளாஸ் சொகுசு செடான் கார் கூடுதல் வசதிகளை மட்டும் பெற்று விற்பனைக்கு வந்துள்ளது. தோற்றம் மற்றும் என்ஜின் ஆப்ஷனிலும் 2016 பென்ஸ் இ கிளாஸ் செடான் காரில் மாற்றங்கள் இல்லை.
மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ்

2016 மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் காரில் 8.9 இஞ்ச் திரையுடன் கூடிய டெலிமேட்டிக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு,  கார்மின் பைலட் மேப் நேவிகேஷன் அமைப்பு மற்றும் ரிவர்ஸ் கேமரா நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஆடியோ 20 டெலிமேட்டிக்ஸ் மூலம் இணைய இணைப்பு , பூளூடூத் , ரேடியோ , சிடி பிளேயர் , ஐபோன் மற்றும் ஐபாட்  கருவிகளுடன் இணைக்கலாம்.

கார்மின் பைலட் மேப் நேவிகேஷன் மூலம் 7068 நகரங்களின் ஸ்டீரிட் லெவலை அறிந்து கொள்ளவும் 80 நகரங்களின் வீடுகளின் தொகுப்பினை கண்டுபிடிக்கும் வகையில் நவீன நேவிகேஷனை கொண்டுள்ளது. நேவிகேஷன் சாஃப்ட்வேர் மெம்மரி கார்டில் கிடைக்கும்.

மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது . அவை 181 பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் , 201 பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 261 பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சொகுசு செடான் கார் என்றால் மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் தான்

2016 மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் விலை விபரம் (ex-showroom, Delhi)

மெர்சிடிஸ் பென்ஸ் E 200 petrol: ரூ 48.5 லட்சம்
மெர்சிடிஸ் பென்ஸ் E 250 CDI diesel: ரூ 50.70 லட்சம்
மெர்சிடிஸ் பென்ஸ் 350 CDI diesel: ரூ 59.9 லட்சம்

2016 Mercedes-Benz E-class launched in India

Exit mobile version