2017 ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

ரூ.8.38 லட்சம் ஆரம்ப விலையில் 2017 ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்பீடியேசன் மற்றும் எக்ஸ்புளோரர் என இரு வேரியன்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்ஸ் கூர்கா

86hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.6 லிட்டர் பிஎஸ் 4 தர மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த என்ஜினில் ஆற்றலை எடுத்து செல்ல 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.

பின்பக்க வீல் டிரைவ் கொண்ட மாடலாக  எக்ஸ்பீடியேசன் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனை எக்ஸ்புளோரர் வேரியன்டும் பெற்றுள்ள நிலையில் முந்தைய மாடலை விட சில குறிப்பிடதக்க வகையிலான முன் மற்றும் பின் பம்பர் மாற்றங்களுடன் புதிய கிரிலை பெற்றுள்ள இந்த எஸ்யூவி மாடலில் ஆல் டெர்ரெயன் டயர்களை பெற்றுள்ளது.

உட்புறத்தில் புதிய ஸ்டீயரிங் வீல் , மேம்படுத்தப்பட்ட இருக்கைகள் லமற்றும் சென்ட்ரல் கன்சோலை ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி பெற்றுள்ளது.

3 மற்றும் 5 கதவுகளை கொண்ட வேரியன்டாக கிடைக்கின்ற எக்ஸ்புளோரர்  மாடலில் ஹார்ட் டாப் , சாஃப்ட் டாப் வகையில் 5 இருக்கை மற்றும் 8 இருக்கை ஆப்ஷனை பெற்றுள்ளது. எக்ஸ்பீடியேசன்  மாடலில் ஹார்ட் டாப் வசதியுடன் 7 மற்றும் 9 இருக்கை ஆப்ஷனை கொண்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட லேடர் ஃபிரேம் அடிச்சட்டத்துடன் மேம்படுத்தப்பட்ட புதிய சஸ்பென்ஷனை பெற்று விளங்குகின்றது.

2017 ஃபோர்ஸ் கூர்கா விலை விபரம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

 

Exit mobile version