Categories: Car News

2018 பிஎம்டபிள்யூ X3 பெட்ரோல் வேரியன்ட் கார் அறிமுகம்…!

₹. 56.90 லட்சம் விலையில் பல்வேறு வசதிகளை பெற்ற மூன்றாவது தலைமுறை பிஎம்டபிள்யூ X3 xDrive30i மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக எக்ஸ்3 காரில் டீசல் எஞ்சின் வேரியன்ட் வெளியானது குறிப்பிடதக்கதாகும்.

பிஎம்டபிள்யூ X3

சில வாரங்களுக்கு முன் வெளியான X3 டீசல் எஞ்சின் மாடலை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெட்ரோல் ரக வேரியன்ட் ஒற்றை  xDrive30i மட்டும் பெற்றுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டுள்ள ட்வீன் டர்போ பெட்ரோல் 2.0 லிட்டர் எஞ்சின், இதே என்ஜின் தான் பிஎம்டபிள்யூ 3 மற்றும் 5 சீரிஸ் மாடல்களில் உள்ளது.

252 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோ கியர் பாக்ஸ் உடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 மாடல் 6.3 நொடியில் 0-100 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக விளங்குகின்றது.

முந்தைய இரண்டாவது தலைமுறை எக்ஸ் 3 மாடலை விட 55 கிலோ வரை எடை குறைக்கப்பட்டுள்ள புதிய மாடலின் டிசைன் அம்சத்தில் பெரிதான மாற்றங்களை பெறாமல் வந்துள்ள எக்ஸ் 3  xDrive30i வேரியன்டில் 10.25 இன்ச் ஐடிரைவ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ,   ஹெட்ஸ்அப் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா ஆகியவற்றை பெற்றுள்ளது.

 

பிஎம்டபிள்யூ X3 xDrive30i விலை ₹. 56.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

Recent Posts

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…

18 hours ago

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…

22 hours ago

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…

1 day ago

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…

1 day ago

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…

2 days ago

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…

2 days ago