Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Car News

2020 டாடா நெக்ஸான் காரின் வசதிகள், விலை உயர்வு எவ்வளவு ?

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 13,January 2020
Share
2 Min Read
SHARE

b102f new tata nexon suv bs6

பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட உள்ள புதிய டாடா நெக்ஸான் மேம்படுத்தப்பட்ட மாடலின் முக்கிய மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

தோற்ற அமைப்பில் தற்போது காட்சிப்படுத்தப்பட்ட நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் உந்துதலை பெருவாரியாக பெற்ற இந்த மாடலில் நீல நிறம் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக மாற்றியமைக்கப்பட்ட முன்புற பம்பர் கிரில் அதில் வழங்கப்பட்டுள்ள ஸ்டார் வடிவிலான பேட்ஜிங் மாற்றியமைக்கப்பட்ட டெயில் லைட் மற்றும் பாடியில் அதிகப்படியான கருப்பு நிற இன்ஷர்ட் இடம்பெற்றிருக்கும். இன்டிரியரை பொறுத்தவரை, புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றதாகவும் நிறங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

நெக்ஸான் காரில் இடையில் வழங்கப்பட்டு வந்த XT வேரியண்ட் நீக்கப்படுவதுடன், தற்போது  XE, XM, XMA, XZ, XZ+, XZA+, XZ+ (O) மற்றும் XZA+ (O) என மொத்தமாக 8 வேரியண்டுகள் இடம்பெறலாம்.

குறிப்பாக டாப் வேரியண்டில் 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல், 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் அலெர்ட், மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், புஸ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன் மற்றும் அணியக்கூடிய வகையில் கீ வழங்கப்பட்டிருக்கும்.

0b835 tata nexon interior

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய என்ஜின்களில் பிஎஸ் 6 முறைக்கு மாற்றப்பட்டிருக்கும். குதிரை திறன் மற்றும் முறுக்கு விசையில் எந்த மாற்றமும் இருக்காது. 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் என்ஜின் 110 ஹெச்பி 5,000 ஆர்.பி.எம் சுழற்சியிலும், 170 என்எம் டார்க்கை 1,750-4,000 ஆர்.பி.எம்-யில் வழங்கும்.

More Auto News

ரூ.7.40 லட்சத்தில் டாடா டியாகோ NRG CNG விற்பனைக்கு வந்தது
20,000 டெலிவரி.., 55,000 புக்கிங் என அசத்தும் 2020 கிரெட்டா எஸ்யூவி
ஆட்டோமொபைல் எதிர்காலம் பாகம்- 3
வெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்
புதிய மினி கூப்பர் எஸ் விற்பனைக்கு வந்தது

அடுத்து, 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போ டீசல் 3,750 ஆர்.பி.எம் சுழற்சியில் 110 ஹெச்பி மற்றும் 1,500-2,750 ஆர்.பி.எம்-ல் 260 என்எம் டார்க் வழங்கும். முன்பு போல, இரண்டு என்ஜினும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோ கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கும்.

2020 நெக்ஸான் பெட்ரோல் என்ஜின் பெற்ற மாடல் விலை ரூ .60,000 முதல் 90,000 வரை அதிகபட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் என்ஜின் மாடல் விலை ரூ .1.4 லட்சம் வரை அதிகபட்சமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது, ​​டாடா நெக்ஸான் விலை பெட்ரோல் XE வேரியன்ட் ரூ .6.70 லட்சத்திலும், டாப் வேரியண்டான டீசல் XZA+ ரூ. 11.4 லட்சமாகவும் தொடங்குகிறது.

2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்துவதனை தொடர்ந்து விற்பனைக்கு வெளியாகலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் CESS என்ற நோக்கத்தில் தனது கார்களை வெளியிட உள்ளது. CESS என்றால் Connected, Electric, Shared மற்றும் Safe ஆகும். 12 பயணிகள் வாகனம், 14 வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக 26 வாகனங்களை வெளியிட உள்ளது.

mini countryman suv
2024 மினி கண்ட்ரிமேன் எஸ்யூவி அறிமுகமானது
விரைவில்., புதிய ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது
ரெனால்ட் அர்பன் நைட் எடிசன் விற்பனைக்கு வெளியானது
ரூ. 40,000 உயர்ந்தது மஹிந்திரா மராஸ்ஸோ விலை
வாவ்.! மேக்னைட் எஸ்யூவி காத்திருப்பு காலம் 8 மாதங்களாக உயர்ந்தது
TAGGED:Tata Nexon
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 பஜாஜ் சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை
Bajaj
2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
mat orange
Hero Motocorp
ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
suzuki e access on road
Suzuki
சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved