கார் செய்திகள்

453 கிமீ ரேஞ்சு.., 2023 டாடா நெக்ஸான் EV விற்பனைக்கு வந்தது

ரூ.85,000 வரை நெக்ஸான் EV எலெக்ட்ரிக் காரின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக மேக்ஸ் வேரியண்டின் ரேஞ்சு 16 கிமீ வரை மென்பொருள் வாயிலாக டாடா மோட்டார்ஸ் அப்டேட் செய்துள்ளது.

தற்போதுள்ள கார் 3.3 kWh ஆன்-போர்டு போர்ட்டபிள் சார்ஜரை ஆதரிக்கிறது. ஆனால் Nexon EV Max மாடலுக்கு 7.2 kWh AC ஃபாஸ்ட் சார்ஜரிலிருந்து கூடுதல் பிரீமியத்திற்கு வாங்கலாம்.

2023 டாடா நெக்ஸான் EV

நெக்ஸான் EV மேக்ஸ் ஆனது 141bhp மற்றும் 250Nm டார்க் உற்பத்தி செய்ய மின்சார மோட்டார்களுக்கு சக்தியளிக்கிறது. இதில் 40.5kWh பேட்டரி பேக்குடன் வருகிறது.  மேக்ஸ் காரின் புதிய XM மாறுபாடு XZ பிளஸ் வேரியண்டிற்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  இப்போது ரூ. 18.49 லட்சத்தின் திருத்தப்பட்ட விலையில் கிடைக்கிறது.

பிரைம் 30.2kWh பேட்டரியுடன் வரும் வேரியண்டுகளில் அப்டேட் வழங்கப்படவில்லை. EV மேக்ஸை வேரி’ண்டிற்கு ரேஞ்சு உயர்த்துவதற்கான மேம்பாடு வழங்கியுள்ளது. இப்போது 453 கிமீ (MIDC சுழற்சி) வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Share