2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா கர்வ் எஸ்யூவி கான்செப்டின் உந்துதலில் புதிய நெக்ஸான் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது வெளியாகியுள்ள இன்டிரியர் மற்றும் வெளிப்புற படங்களில் விற்பனையில் உள்ள காரை விட பல்வேறு மாற்றங்களை கொண்டதாக அமைந்திருக்கும்.
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் காரில் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 115hp பவர் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரு ஆப்ஷனை வழங்கும். மேலும் விவரங்கள் அறிமுகத்திற்கு முன்பாக வெளியாகும். புதிய காரின் வடிவமைப்பினை நெக்ஸான் மின்சார EV காரிலும் கிடைக்கும்.
நெக்ஸான் காரின் வெளிப்புற தோற்ற அமைப்பில் மிக முக்கியமாக பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வரும். Curvv எஸ்யூவி கான்செப்ட் மூலம் பெறப்பட்ட புதிய ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்களுடன் புதிய பம்பர்கள் மற்றும் கிரில் வடிவமைப்புடன் ஆகியவற்றுடன் அலாய் வீல்கள் வடிவமைப்பிலும் மாற்றங்கள் இருக்கும்.
இன்டிரியரில், புதிய இரண்டு ஸ்போக் பெற்ற பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் கர்வ்வ் கான்செப்ட்டில் உள்ளதை போல காணப்படுகின்றது. ஸ்டீயரிங் இரண்டு புறத்தில் கண்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளன.
புதிய டச் பேனலுடன் மாற்றியமைக்கப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் HVAC சுவிட்சுகள், டாடாவின் புதிய 10.25 இன்ச் தொடுதிரையும் வழங்கப்பட்டு நேர்த்தியான கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறக்கூடும்.
தற்போது புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி ரெட் டார்க் மாடல்களில் உள்ள புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் பல்வேறு வசதிகளை நெக்ஸான் காரும் பெற உள்ளது.
வரும் ஆகஸ்ட் 2023-ல் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் விலை அறிவிக்கப்படும். தற்போதைய மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையான ரூ.7.80 லட்சம்- ரூ. 14.35 லட்சத்தை விட சற்று கூடுதலாக விலை அமைந்திருக்கலாம்.
கியா சோனெட், நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300 மற்றும் மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்களை நெக்ஸான் எதிர்கொள்ளும்.