Skip to content

2024 ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது

2024 Hyundai alcazar

ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட ஹூண்டாய் நிறுவனத்தின் 2024 அல்கசார் எஸ்யூவி காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த காருக்கான முன்பதிவு இன்று முதல் துவங்கப்பட்டு முன்பதிவு கட்டணமாக ரூபாய் 25,000 வசூலிக்கப்படுகின்றது.

நடப்பு ஆண்டின் துவக்கத்தில் வெளியான புதிய கிரெட்டா காரின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மாடலில் பல்வேறு டிசைன் மாற்றங்கள் அங்கிருந்து பெறப்பட்டிருந்தாலும் முன்புற கிரில் அமைப்பு போன்றவை எல்லாம் சற்று வித்தியாசமான அமைப்பினை வெளிப்படுத்துகின்றது மற்றபடி எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் H-வடிவ ஹெட்லைட் அமைப்பு போன்றவை எல்லாம் கிரெட்டா மாடலில் இருந்து பெறப்பட்டது போலவே அமைந்திருக்கின்றது.

பக்கவாட்டினை பொருத்தவரை பெரிதாக மாற்றங்கள் இல்லை என்றாலும் ரூஃப் லைன் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல் பெறுகின்றது.

பின்புறம் புதுப்பிக்கப்பட்ட எல்இடி லைட் பார் மற்றும் டெயில்லைட் ஆனது கொண்டிருக்கின்றது. நம்பர் பிளேட்டிற்கான இடவசதியானது சற்று மாற்றியமைக்கப்பட்டு கீழே உள்ள ஸ்கிட்பிளேட் ஆனது மிக சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது.

இன்டீரியர் தொடர்பான படங்களில் எதுவும் தற்பொழுது வெளியிடப்படவில்லை என்றாலும் ஏற்கனவே உள்ள க்ரெட்டா மாடலில் இருந்து பெறப்பட்ட பல்வேறு அம்சங்களை இந்த மாடலின் இன்டீரியர் ஆனது பெற்று இருக்கும்.

Executive, Prestige, Platinum மற்றும் Signature ஆகிய 4 வேரியண்ட் மற்றும் 9 நிறங்களும் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் தற்பொழுது உள்ள எஞ்சினே தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனைக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தற்போது படங்களானது வெளியிடப்பட்டிருக்கின்றது. மேலதிக விபரங்கள் மற்றும் முழுமையான விபரங்கள் ஆனது அடுத்தடுத்து வெளியாகும் தொடர்ந்து முழுமையான விலை பட்டியல் கிடைக்கும்.

2024 Hyundai alcazar suv