Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

விரைவில் 2024 கியா சொனெட் எஸ்யூவி அறிமுகமாகிறது

By MR.Durai
Last updated: 27,November 2023
Share
SHARE

kia Sonet aurochs rear

கியா மோட்டார் நிறுவனத்தின் மேம்பட்ட புதிய சொனெட் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் ADAS பாதுகாப்பு தொகுப்பு அம்சங்களுடன் கூடுதலாக சில நிறங்களை அறிமுகம் செய்ய உள்ளது. மற்றபடி, என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் பெறுவதற்கு வாய்ப்பில்லை

ஹூண்டாய் வென்யூ பிளாட்ஃபாரம் மற்றும் என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற சொனெட் காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற உள்ளது.

Kia Sonet Facelift

சொனெட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரில் 83hp, 1.2-லிட்டர், 5-ஸ்பீடு மேனுவலுடன் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உள்ளது. 120hp பவர் மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டிசிடி மட்டுமே பெறுகின்றது.

1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 100 hp பவர் மற்றும் 240 Nm டார்க் வழங்குவதுடன் fixed-geometry-turbo நுட்பத்தை கொண்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் variable-geometry பெற்று 115 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்குகின்றது.

தோற்ற அமைப்பில் புதிய 2024 கியா சொனெட் மாடலின் முன்புற பம்பர் அமைப்பில் GT Line மற்றும் HT Line என இரண்டும் சில வித்தியாசமான மாறுதல்களை பெற்று புதிய எல்இடி ஹெட்லைட் ரன்னிங் விளக்கு அமைப்பு போன்றவை சீன சந்தையில் வெளியான மாடலை போலவே அமைந்திருக்கலாம்,

kia sonet fr

இன்டிரியரில் புதிய சுவிட்ச் கியர் மேம்பட்ட வசதிகளை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டிருக்கலாம். அடிப்படையான 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS பாதுகாப்பு தொகுப்பினை நிரந்தர வசதியாக சேர்க்கப்படலாம்.

டிசம்பர் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்படலாம். சொனெட் போட்டியாளர்களாக டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, நிசான் மேக்னைட், ரெனோ கிகர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ், வரவிருக்கும் டொயோட்டா டைசோர் ஆகியவை உள்ளன.

kia sonet facelift fr and rear kia sonet facelift rear kia sonet facelift fr

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Kia Sonet
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero-xpulse-200s-4v-pro-white
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
2025 Suzuki V Strom SX
Suzuki
2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms