ஹூண்டாய் இந்தியாவின் பிரசத்தி பெற்ற க்ரெட்டா எஸ்யூவி மாடலின் வெற்றிகரமான 10 ஆண்டுகால கொண்டாட்டத்தை முன்னிட்டு கிங், கிங் நைட் மற்றும் கிங் லிமிடெட் எடிசன் என மூன்றிலும் வெளியிடப்பட்டுள்ளது.
1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று எஞ்சின் ஆப்ஷனிலும் கிங் எடிசன் கிடைக்க உள்ளது.
க்ரெட்டா King எடிசன் சிறப்புகள்
மூன்று எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கின்ற கிங் வேரியண்டில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் மொத்தமாக 6 வகைகளில் ரூ.17.89 லட்சம் முதல் ரூ.20.61 லட்சம் வரை கிடைக்கின்றது.
கிங் வேரியண்டில் புதிய பிளாக் மேட் பெயிண்ட் வழங்கப்பட்டு 18-இன்ச் டயமண்ட்-கட் அலாய் வீல்கள், டிரைவர் பவர் சீட் மெமரி வசதி, டாஷ்கேம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, நகரும் வகையில் முன்பக்க ஆர்ம்ரெஸ்டில் கிங் லோகோவுடன் ஸ்டோரேஜ் வசதி, 8 விதமான செயல்பாடு கொண்ட அட்ஜெஸ்டபிள் முன்பக்க உடன் பயணிப்பவருக்கான இருக்கை, மற்றும் கிங் பேட்ஜிங் உள்ளது.
க்ரெட்டா King Knight எடிசன் சிறப்புகள்
ஆட்டோமேட்டிக் டீசல் மற்றும் சிவிடி பெட்ரோலில் கிடைக்கின்ற கிங் நைட் எடிசனின் விலை ரூ. 19.49 லட்சம் முதல் ரூ.20.77 வரை அமைந்து கிங் எடிசனை விட வேறுபடுத்துவதற்காக, 18-இன்ச் மேட் கருப்பு அலாய் மற்றும் ஒரு நைட் எடிசன் பேட்ஜிங் பெற்றுள்ளது.
க்ரெட்டா King Limited எடிசன் சிறப்புகள்
ஆட்டோமேட்டிக் டீசல் மற்றும் சிவிடி பெட்ரோலில் கிடைக்கின்ற கிங் லிமிடெட் எடிசனின் விலை ரூ. 19.64 லட்சம் முதல் ரூ.20.92 வரை அமைந்துள்ளது. வழக்கமான கிங் வேரியண்டடை விட, சீட் பெல்ட் கவர், ஹெட்ரெஸ்ட் மெத்தைகள், புதிய கார்பெட் பாய்கள், சாவி கவர் மற்றும் கூடுதல் கதவுப்பூச்சு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும், கிரெட்டா, கிரெட்டா என்-லைனில் இரட்டை மண்டல ஏசி, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஒரு டேஷ்கேம் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் பெற்றுள்ளது.
(கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலையும் எக்ஸ்-ஷோரூம்)