நிசான் இந்தியாவின் பிரசத்தி பெற்ற மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் KURO என்ற பெயரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு N-Connecta வேரியண்டை அடிப்பையாக கொண்டு கூடுதல் வசதிகளுடன் ரூ.8.31 லட்சம் முதல் ரூ.10.86 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.
- Nissan Magnite Kuro 1.0l MT – ₹ 8,30,500
- Nissan Magnite Kuro 1.0l AMT – ₹ 8,85,500
- Nissan Magnite Kuro 1.0l Turbo MT – ₹ 9,71,500
- Nissan Magnite Kuro 1.0l turbo CVT – ₹ 10,86,500
Nissan Magnite Kuro எடிசன் சிறப்புகள்
கருப்பு அலாய் வீல்கள், பியானோ கருப்பு சிக்னேச்சர் கிரில், ரெசின் கருப்பு ஸ்கிட் பிளேட், டார்க் டோர் பக்கவாட்டு மோல்டிங்ஸ், கருப்பு கதவு கைப்பிடிகள், பளபளப்பான கருப்பு கூரை ரயில் மற்றும் குரோ பேட்ஜிங் ஆனது வெளிப்புறத்தில் உள்ளது.
இன்டீரியரில் டார்க் ஷேட் ரூஃப் லைனர், சன் வைசர், கிராப் ஹேண்டில்ஸ், பியானோ கருப்பு கவர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், கருப்பு – ஏர் வென்ட், டோர் டிரிம், கியர் ஷிப்ட் கார்னிஷ் மற்றும் இன்டீரியர் டோர் ஹேண்டில், வயர்லெஸ் சார்ஜர், முன்பக்க இருக்கைகளுக்கு ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
மற்றபடி, N-Connecta வேரியண்டின் அடிப்படையில் 6 ஏர்பேக்குகளுடன் , 16 அங்குல டைம்மன்ட் கட் அலாய் வீல், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 6 ஸ்பீக்கர்கள், ARKAMYS மூலம் 3D ஒலி, லெதேரேட் டாஷ்போர்டு, தானியங்கு மங்கலான IRVM மற்றும் ஸ்மார்ட் கீ உட்பட 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே உள்ளது.
1.0 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சின் 72hp பவர் 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.
- 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 19.4 கிமீ ஆகவும்
- ஏஎம்டி கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 19.7 கிமீ ஆகும்.
அடுத்து, 100 hp பவர் வெளிப்படுத்தும் 5,000rpm மற்றும் 160 Nm டார்க் ஆனது 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
- 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 19.9 கிமீ ஆகவும்
- சிவிடி கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 17.9 கிமீ ஆகும்.