ரெனால்ட் இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற குறைந்த விலை 7 இருக்கை பெற்ற ட்ரைபர் எம்பிவி விலை ரூ.6.29 லட்சம் முதல் ரூ.8.64 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை அறிவிக்கப்படுள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனை விரும்பினால் டீலர்கள் மூலம் பொருத்திக் கொள்ளலாம்.
எஞ்சின் ஆப்ஷனில் டர்போ எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து NA எஞ்சின் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
Variant | Price |
Authentic | Rs 6.29 லட்சம் |
Evolution | Rs 7.24 லட்சம் |
Techno | Rs 7.99 லட்சம் |
Emotion | Rs 8.64 லட்சம் |
Emotion AMT | Rs 9.17 லட்சம் |
கூடுதலாக டாப் வேரியண்டில் உள்ள கருப்பு மேற்கூரை உள்ள வெள்ளை, கிரே மற்றும் டெராகோட்டா ஆகியவற்றுக்கு ரூ.23,000 வரை கூடுதலாக செலுத்த வேண்டும்
2025 Renault Triber Facelift
குறிப்பாக, Authentic, Evolution, Techno, Emotion என நான்கிலும் 2025 ட்ரைபர் காரில் 6 ஏர்பேக்குகள் அடிப்படை பாதுகாப்பாக சேர்க்கப்பட்டு முன் பார்க்கிங் சென்சார்கள், EBD உடன் ABS, ESC, பார்க்கிங் சென்சார்களுடன் ரியர் பார்க்கிங் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றை சேர்த்துள்ளது.
கூடுதலாக, க்ரூஸ் கண்ட்ரோல், தானியங்கி ஹெட்லேம்ப்கள், மழை உணர்ந்து செயல்படும் வைப்பர் இடம்பெற்றுள்ளது.
இன்டீரியரில் தொடர்ந்து 7 இருக்கைகளை பெற்றாலும் புதுப்பிக்கப்பட்ட டேஸ்போர்டில் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்துடன் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, மிதக்கும் வகையிலான 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றுடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றுள்ளது.
மற்ற வசதிகளில், புஷ்-பட்டன் ஸ்டார்ட், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கட்டுப்பாடுகள் மற்றும் பின்புற இருக்கைகளுக்கும் ஏசி வென்ட் மற்றும் கீலெஸ் என்ட்ரி உள்ளது.
வெளிப்புறத்தில் மிக முக்கியமான ரெனால்ட் நிறுவன புதிய வைர இன்ட்ர்லாக்டூ லோகோ உடன் கிரில் அமைப்பு, பம்பரில் சிறிய மாற்றங்களுடன், புதிய ரன்னிங் விளக்குடன் எல்இடி புராஜெக்டர் விளக்கினை பெற்றுள்ளது.
பக்கவாட்டில் 15 அங்குல புதிய அலாய் வீல் பெற்று பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குடன் கூடுதலாக புதிய லோகோ மற்றும் TRIBER எழுத்துரு நேர்த்தியாகவும், பம்பர் மாற்றப்பட்டுள்ளது.