பிரிமீயம் ஹேட்ச்பேக் சந்தையில் கிடைக்கின்ற டாடாவின் 2025 அல்ட்ரோஸ் புதிதாக பல்வேறு மாற்றங்கள் மற்றும் சிறப்புகள் கொடுக்கப்பட்டு பலேனோ, கிளான்ஸா மற்றும் ஐ20 கார்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து சி.என்.ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் என மூன்று விதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. இந்தியாவில் கிடைக்கின்ற ஒரே டீசல் குறைந்த விலை ஹேட்ச்பேக் மாடலாகும். 2025 அல்ட்ரோஸ் ரேசர் டர்போ பற்றி எந்த உறுதியான தகவலும் தற்பொழுது வெளியிடப்படவில்லை.
Tata Altroz
இன்டீரியர் மாற்றங்களை பொருத்தவரை தற்பொழுது உள்ள காரை விட கூடுதலாகவும் பிரிமியம் வசதிகளை பெற்றதாக அமைந்துள்ள அலட்ராஸ் ஆனது பெரும்பாலான வசதிகளை டாடாவின் நெக்ஸான் மற்றும் கர்வ் போன்ற மாடல்களில் இருந்து பெற்றுள்ளது.
குறிப்பாக ஃபுளோட்டிங் முறையிலான 10.25 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர் போன்றவை எல்லாம் கொடுக்கப்பட்டு டிஜிட்டல் கிளஸ்டரில் இன்பில்ட் நேவிகேஷன் ஆக மேப்பும் வழங்கப்பட்டுள்ளது முக்கிய ஒரு மாற்றமாக கருதப்படுகின்றது மற்றபடி, மிக தாராளமான இட வசதிகள் மற்றும் இருக்கைகளின் தரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்படுத்தப்பட்டதாக அமைந்திருக்கின்றது.
அல்ட்ரோஸ் வெளிப்புற மாற்றங்கள்
அல்ட்ரோஸ் 2025 ஆம் ஆண்டிற்கான காரின் வெளிப்புறத் தோற்றத்தைப் பொறுத்தவரை முன்புற கிரில் அமைப்பு மற்றும் பம்பர் உள்ளிட்ட இடங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றது. அதே நேரத்தில் எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி ஹெட் லைட் அமைப்பும் புதுப்பிக்கப்பட்டுள்ள அம்சங்கள் மிக முக்கியமாக ஒன்றாக கருதப்படுகின்றது.
டிசைனில் மற்றபடி வெளிப்புறத்தில் பக்கவாட்டில் பெரிதாக மாற்றமில்லை என்றாலும் புதிதாக 16 அங்குல வீல் ஆனது கொடுக்கப்பட்டு ஏரோ டிசைனில் வடிவமைக்கப்பட்டு பிளக்ஸ் டைப் கைப்பிடிகள் ஒளிரும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்புறத்தில் புதிய பம்பர் மற்றும் எல்இடி லைட்பார், டெயில் லைட் எல்லாம் மேம்படுத்தப்பட்டு மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றது. ஒட்டு மொத்தத்தில் காரின் தோற்ற அமைப்பு மிகவும் பிரமியமாக அமைந்திருக்கின்றது.
அல்ட்ரோஸ் எஞ்சின் ஆப்ஷன்
எஞ்சின் ஆப்ஷனில் 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. அதுவே CNG எரிபொருள் பெற்ற மாடல் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.
1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 4000rpm-ல் 89PS பவர் மற்றும் 1250-3000rpm-ல் 200Nm வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
மே 22 ஆம் தேதி டாடா மோட்டார்சின் அல்ட்ரோஸ் 2025 காரின் விலை அறிவிக்கப்பட உள்ளது.