Car News

2025ல் வரவுள்ள டாடா பஞ்ச் எஸ்யூவி சோதனை ஓட்டம் துவங்கியது

புதுப்பிக்கப்பட்ட பஞ்ச் எஸ்யூவி மாடல் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Spread the love

இந்தியாவின் 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற எஸ்யூவிகளில் பிரபலமாக உள்ள டாடா மோட்டார்சின் பஞ்ச் எஸ்யூவி மாடலின் மேம்படுத்தப்பட்ட டிசைன் கொண்ட 2025 ஆம் ஆண்டிற்கான மாடலின் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் இணையத்தில் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

தற்பொழுது விற்பனையில் கிடைத்து வருகின்ற பஞ்ச் இவி காரின் அடிப்படையிலான டிசைன் உந்துதலை தழுவியதாக எதிர்பார்க்கப்படுகின்ற புதிய பஞ்சில் முன்பக்க கிரில் மற்றும் பம்பர் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் பார் லைட் முன்பக்கம் வழங்கப்படுவதுடன், பக்கவாட்டில் புதிய அலாய் வீல் மட்டும் பெற்று கதவுகள் மற்றும் பின்புற சி பில்லர் பகுதியில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட பம்பருடன் தற்பொழுதுள்ள அதே எல்இடி டெயில் லைட்டுகளை கொண்டிருக்கின்றது.

இன்டிரியர் தொடர்பான படங்கள் தற்பொழுது கிடைக்கவில்லை என்றாலும், சிறிய அளவிலான மேம்பாடுகளை பெற்ற டேஸ்போர்டில் ஸ்டைலிங் மாற்றங்களுடன் நிறங்கள் வேறுபடுத்த வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க – டாடா பஞ்சுக்கு எதிராக உள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் ஒப்பீடு

எஞ்சின் விருப்பங்களில் எந்த மாற்றமும் இல்லாமல், தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற பஞ்சில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 3 சிலிண்டர் கொண்ட மாடல் அதிகபட்சமாக 86 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனில் 74PS பவர் வெளிப்படுத்துகின்றது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் சிட்ரோன் சி3 உட்பட பல்வேறு சிறிய ஹேட்ச்பேக் கார்களை ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சத்தில் உள்ள கார்களை எதிர்கொள்ளுகின்றது.

2025 ஆம் ஆண்டில் நடைப்றுகின்ற பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதம் விற்பனைக்கு வரக்கூடும்.

image source – instagram/thesimbarider


Spread the love
Share
Published by
BHP Raja