டாடாவின் பிரசத்தி பெற்ற சஃபாரி எஸ்யூவி காரில் கூடுதலாக அட்வென்ச்சர் X என்ற வேரியண்ட் வெளியிடப்பட்டு சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றதாகவும், டார்க் எடிசன் ஸ்டெல்த் எடிசன் அன அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 டாடா சஃபாரி எஸ்யூவி ரூ. 15,49,990 முதல் ரூ.25,19,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது. தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விலை அக்டோபர் 31, 2025 வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 Tata Safari
சஃபாரியில் 170 hp பவர் மற்றும் 350Nm டார்க் வழங்கும் 2.0-லிட்டர் Kyrotec 4 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக மேனுவல் அல்லது 6 டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
புதிதாக வந்துள்ள Adventure X வேரியண்டில் க்ரூஸ் கட்டுப்பாட்டுடன் கூடிய ADAS, 360-டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் உடன் கூடிய டிரெயில் ஹோல்ட் EPB, டிரெயில் ரெஸ்பான்ஸ் முறைகள் (இயல்பான, கரடுமுரடான, ஈரமான), எர்கோமேக்ஸ் டிரைவர் இருக்கை, 10.24-இன்ச் இரட்டை டிஜிட்டல் திரைகள், டிரெயில் சென்ஸ் ஆட்டோ ஹெட்லேம்ப்கள், அட்வென்ச்சர் X லோகோவுடன் கூடிய 18-இன்ச் அலாய் வீல் மற்றும் ஓனிக்ஸ் டிரெயில் உட்புறத்தை பெற்றதாக அமைந்துள்ளது.
Variants | EX-showroom |
---|---|
Smart | ரூ.15,49,990 |
Pure X | ரூ. 18,49,000 |
Adventure X+ | ரூ. 19,99,000 |
Accomplished X | ரூ. 23,09,000 |
Accomplished X + (7S) | ரூ. 25,09,000 |
Accomplished X + (6s) | ரூ. 25,19,000 |
மேலே கொடுக்கப்பட்டுள்ள விலை பட்டியலில் ஆட்டோமேட்டிக் வேரியண்டுகள் ரூ.1.70 லட்சம் வரை கூடுதலாகவும், டார்க் பதிப்புகளின் விலை ரூ35,000 முதல் ரூ.65,000 கூடுலாகவும், இறுதியாக ஸ்டெல்த் எடிசன் விலை ரூ.75,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.