உலகளவில் வால்வோ நிறுவனத்துக்கு சுமார் 27 லட்சத்துக்கும் கூடுதலாக விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ள XC60 காரின் 2025 ஆம் ஆண்டிற்கான ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ரூ.71.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய மாடலில் இருந்து சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் இன்டீரியரில் கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
Volvo XC60
ஃபாரஸ்ட் லேக் , கிரிஸ்டல் ஒயிட், ஓனிக்ஸ் பிளாக், டெனிம் ப்ளூ, பிரைட் டஸ்க் மற்றும் வேப்பர் கிரே ஆகிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காரின் தோற்றத்தில் முன்பக்க கிரில், பம்பர் உள்ளிட்ட இடங்களில் சிறிய மாறுதல்களுடன் பக்கவாட்டில் 19 அங்குல வீல் கொடுக்கபட்டுள்ளது.
இன்டீரியரில் மிதக்கும் வகையிலான 11.2 அங்குல தொடுதிரை சிஸ்டத்தை கூகுள் மூலம் இயக்கப்படுகின்ற நிலையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப் மூலமாக இயக்கப்படுகிறது. 15 ஸ்பீக்கர்களைக் கொண்ட 1410W-போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டத்துடன் உள்ளது.
தொடர்ந்து, எக்ஸ்சி60 ஆல் வீல் டிரைவ் பெற்று 250Hp மற்றும் 360Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரிட் எஞ்சின் பெற்று 8 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பெற்றதாக வந்துள்ளது. இதில் உள்ள லேசான ஹைபிரிட் சார்ந்த அமைப்பிற்கு 48V பேட்டரியையும் பெறுகிறது, இதன் மூலம் எரிபொருள் சிக்கனம் மற்றும் ஆக்சிலிரேஷனை மேம்படுத்துகிறது.