Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

வெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 16,October 2018
Share
1 Min Read
SHARE

சமீபத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய சாண்ட்ரோ கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய சாண்ட்ரோ 2018 இந்தியா கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில், இந்த காரின் உள்அலங்காரம் குறித்த ஸ்பைடு இமேஜ்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இமேஜ்களில் காரின் உட்புறத்தில் சில பகுதிகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் ஆன்லைனில் பரவி வரும் இந்த புதிய புகைப்படங்கள் முழுமையான தகவல்கள் இடம் பெறவில்லை.

ஸ்பைடு புகைப்படங்களின்படி, புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களின் உள்புறத்தில், டூயல்-டோன் லேஅவுட்களுடன், மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க தேவையான வலுவான மெட்டீரியர்கள் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

உயர்தரம் கொண்ட கார்களில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் கார்பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ, மிரர்லிங்க் மற்றும் வாய்ஸ் கமாண்ட்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும் இன்போடேய்ன்மென்ட்களுக்கு கீழே மெல்லிய ரப்பர் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மத்திய பகுதியில் ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏசி ஏர் கான்ஸ்கள் பக்கவாட்டில் டர்பைன் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சாண்ட்ரோ கார்கள், 1.1 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டதாக இருக்கும். மேலும் இது 67bhp ஆற்றலுடனும் 99Nm டார்க்யூ-கில் இயங்கும். இந்த இன்ஜின் 5 ஸ்பீட் மெனுவல் அல்லது AMT உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும் இந்த காரில் CNG வகைகளும் கிடைக்கிறது. இது பெட்ரோல் இன்ஜின்கள் போன்ற ஆற்றலில் இயங்கும். இந்த புதிய காரின் விலை வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங் தொடங்கப்பட்டு விட்ட நிலையில், வரும் 22ம் தேதி வரை ஆன்லைனில் புக்கிங் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காம்பஸ் நைட் ஈகிள் எடிஷனை விற்பனைக்கு வெளியிட்ட ஜீப்
புதிய டாடா நெக்ஸான் வேரியண்ட் வாரியான வசதிகள்
மாருதி வேகன் ஆர் ஃபேஸ்லிப்ட் -2013
மாருதி இக்னிஸ் காரின் டீஸர் வெளியீடு
மாருதி ஆல்ட்டோ, ஸ்விப்ட், டிசையருக்கு புதிய கடன் திட்டம்
TAGGED:Hyundai Santro
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
TVS-X scooter-price
TVS
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்
rayzr 125 cyan blue
Yamaha
யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
hero splendor plus xtec disc brake
Hero Motocorp
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved