Automobile Tamilan

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அறிமுகமானது

Tata Sierra First look

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரசத்தி பெற்ற சியரா எஸ்யூவி நவீன காலத்திற்கு ஏற்றதாக மட்டுமல்லாமல், பாரம்பரிய டிசைன் வடிவத்தை நினைவுப்படுத்துகின்ற நிலையில் விற்பனைக்கு நவம்பர் 25 ஆம் தேதி விலை ரூ.12 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புள்ளது.

Tata Sierra

பழைய சியராவின் அழகையும், புதிய தொழில்நுட்பத்தையும் கலந்து புதுப்பிக்கப்பட்ட அம்சங்களை பெற்று 5 இருக்கை கொண்ட எஸ்யூவியின் முன்புறத்தில் டாடா லோகோ கொடுக்கப்பட்டு Sierra எழுத்துரு லோகோ கொடுக்கப்பட்டு, மிகவும் கவர்ச்சிகரமாக விளங்க பளபளப்பான கிரில் அமைப்பினை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மிக நேர்த்தியான வடிவமைப்பிற்கு ரெட் டாட் டிசைனை பெற்றுள்ள இந்த புதிய சியராவின் பின்புற பகுதி சிறிது குறைவாக (chopped off) வடிவமைக்கப்பட்டு இருப்பதன் மூலம் மிக சிறப்பான பூட் ஸ்பேஸ் மற்றும் இன்டீரியர் ஸ்பேஸ் அதிகரிக்க உதவுகிறது.

முந்தைய சியராவில் இருந்தபோல் பின்பக்க பம்பர் வெளியே நீட்டிக்கப்படவில்லை. ஆனாலும், மொத்தமாகப் பார்த்தால் இந்த புதிய வடிவமைப்பு அழகாகத் தோன்றுகிறது.

டாடா சியராவின் பிரபலமான பின்புற ஜன்னல் வளைவு (signature rear window curve) இந்த முறை புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டு, அதன் பழைய அடையாளத்தை தக்கவைத்திருக்கிறது.

இன்டீரியரில் கருப்பு மற்றும் சாம்பல் நிறம் என இரட்டை நிற கலவை பெற்று உள்ளே 5 இருக்கைகள் ஆனது வழங்கப்பட்டு பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தை கொண்டு, அனைத்து இருக்கைகளுக்கும் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 3-புள்ளி சீட் பெல்ட்கள், இரட்டை மண்டல தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் தொலைபேசி சார்ஜர், இயங்கும் மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள், பின்புற சன்ஷேடுகள், 360-டிகிரி கேமரா, லெவல்-2 ADAS மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை இடம்பெற உள்ளது.  C-பில்லர் வரை நீண்டிருக்கும் பிரமாண்டமான பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்பட உள்ளது.

என்ஜின் ஆப்ஷனில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 170hp மற்றும் 280Nm டார்க் வெளிப்படுத்த உள்ள நிலையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இரண்டிலும் கிடைக்கும்.

அடுத்து, கர்வ் மற்றும் டாடா நெக்ஸானில் ஏற்கனவே உள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்பட்டு பவர் 118hp மற்றும் 260Nm டார்க்கை வெளிப்படுத்தும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் வரவுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட் மற்றும் பிற நடுத்தர எஸ்யூவிகளான விக்டோரிஸ், எம்ஜி ஹெக்டர் என பலவற்றை எதிர்கொள்வதுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ போன்றவற்றுக்கும் சியரா சவால் விடுக்க உள்ளது.

Exit mobile version