இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம், 440 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை ரூபாய் 69.90 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் மூன்று மின்சார பேட்டரி வாகனங்கள் விற்பனை செய்யும் நிலையில் இது நான்காவது மாடலாகும்.
iX1 xDrive30 வேரியண்டில் 64.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இரட்டை மோட்டார் அமைப்பின் மூலம் அதிகபட்சமாக 313bhp பவர் மற்றும் 494Nm டார்க் வரை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி வெறும் 5.3 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்டும் . AWD கொண்டதாக வரவுள்ளது.
பிஎம்டபிள்யூ iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை சிங்கிள் சார்ஜிங் மூலம் அதிகபட்சமாக 440KM வரை வெளிப்படுத்தும்.