Automobile Tamilan

இந்தியாவில் 2 கோடி ரூபாய்க்கு பிஎம்டபிள்யூ M5 அறிமுகமானது..!

7th gen bmw m5 car

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் ரூ.2 கோடி விலையில் பெர்ஃபாமென்ஸ் ரக M5 செடானை முழுவதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்ற இந்த காரில் தற்பொழுது 7வது தலைமுறை மாடல் இந்திய சந்தைக்கு வந்துள்ளது.

4.4-லிட்டர் ட்வின்-டர்போ V8 எஞ்சின் பெற்று 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட எம்5 காரில் கூடுதலாக தற்பொழுது எலெகட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு ஹைபிரிட் மாடலாக வந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த பெர்ஃபாமென்ஸ் 535 kW (727 hp) மற்றும் டார்க் 1,000 Nm வரை வெளிப்படுத்துகின்றது. எஞ்சின் 430 kW (585 hp) மற்றும் 750 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் மின்சார மோட்டார் ஆனது  145 kW (197 hp) மற்றும் 280 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் உள்ள 18.6 kwh லித்தியம் பேட்டரி கொண்டு எலெக்ட்ரிக் வெர்ஷனில் 140kph வேகத்தில் 69 கிமீ வரை மட்டும் பயணிக்கலாம்.

M5 காரின் அதிகபட்ச வேகம் 250 km/h ஆக வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால் விருப்பமான M டிரைவர் பேக்கேஜ் சேர்க்கப்பட்டிருந்தால் 305 km/h வேகத்தை எட்டும்.

பளபளப்பான M கிட்னி வடிவ கிரிலில் M5 லோகோ பானெட்டில் பிஎம்டபிள்யூ லோகோ பெற்று மிகவும் ஸ்போர்ட்டிவான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள காரின் இன்டீரியரில் புதிதாக வடிவமைக்கப்பட்ட M லெதர் ஸ்டீயரிங் வீல் மூன்று-ஸ்போக் வடிவமைப்பில் ஒரு தட்டையான-அடி விளிம்புடன், BMW M GmbH வண்ணங்களில் அலங்கார தையல் மற்றும் 12-மணிநேர நிலையில் சிவப்பு மைய மார்க்கர் ஆகியவை காக்பிட்டின் ரேஸ் கார் உணர்வினை தருகிறது.

Exit mobile version