Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ரூ.6 லட்சத்துக்குள் 6 ஏர்பேக் கொண்ட பாதுகாப்பான 5 கார்கள்.!

By நிவின் கார்த்தி - Editor
Last updated: 7,March 2025
Share
3 Min Read
SHARE

best cars under 6 lakhs with 6 airbags

சமீப காலமாக இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற கார்களில் பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில் 6 ஏர்பேக்குகளை பெற்று குறைந்த விலையில் துவங்குகின்ற மாடல்களை பற்றி சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 1. Maruti Suzuki ALTO K10
  • 2.  Maruti Suzuki Celerio
  • 3. Hyundai Grand i10 Nios
  • 4. Nissan Magnite
  • 5. Citroen C3
  • 6. Hyundai Exter

ஏர்பேக்குகள் எனப்படுகின்ற SRS Airbags விபத்தின் பொழுது பயணிகளுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நிலையில், இது இரண்டாம் கட்ட பாதுகாப்புதான் முதல் பாதுகாப்பு சீட் பெல்ட் அணிவது தான் கார்களில் மிக முக்கியமான பாதுகாப்பு என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

1. Maruti Suzuki ALTO K10

இந்தியாவில் சுமார் 46 லட்சத்துக்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள ஆல்டோ கே10 காரும் தற்பொழுது 6 ஏர்பேக்குகளை நிரந்தர பாதுகாப்பு வசதியாக பெற்று 3 புள்ளி சீட் பெல்ட் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த மாடல் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 67 HP பவர் பெட்ரோல் மற்றும் 56 HP பவர் சிஎன்ஜி என இரு ஆப்ஷனை கொண்டு 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.23 லட்சம் முதல் ரூ.6.21 லட்சம் வரை அமைந்துள்ளது.

மாருதி சுசூகி ஆல்டோ கே10

2.  Maruti Suzuki Celerio

இந்தியாவின் குறைந்த விஙையில் 6 ஏர்பேக்குகள், 3 பாயின்ட் சீட் பெல்ட் அனைத்து இருக்கைளுக்கும் பெறுகின்ற மாருதி செலிரியோ காரில் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 67 HP பவர் பெட்ரோல் மற்றும் 56 HP பவர் சிஎன்ஜி என இரு ஆப்ஷனை கொண்டு 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.64 லட்சம் முதல் ரூ.7.37 லட்சம் வரை அமைந்துள்ளது.

6 ஏர்பேக்குகளுடன் 2025 மாருதி சுசூகி செலிரியோ

3. Hyundai Grand i10 Nios

சிறிய ரக சந்தையில் முதன்முறையாக 6 காற்றுப்பைகளை பெற்ற ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில்  83hp, 114Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு மேனுவல், ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பெட்ரோல் ஆப்ஷனை தவிர பூட்ஸ்பேஸ் பெறும் வகையிலான ட்வீன் சிலிண்டர் சிஎன்ஜி ஆப்ஷனை கொண்டதாக அமைந்துள்ள காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.98 லட்சம் முதல் ரூ.8.62 லட்சம் வரை அமைந்துள்ளது.

grand i10 nios hyundai

4. Nissan Magnite

அடுத்து 6 ஏர்பேக்கினை பெற்ற வரிசையில் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் இந்திய மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள மேக்னைட் எஸ்யூவி விளங்குகின்றது. இந்த மாடலில் 72hp பவர் 1.0 லிட்டர் மேனுவல் மற்றும் ஏஎம்டி, 100hp பவர் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல், சிவிடி என இரு எஞ்சின் ஆப்ஷனை கொண்டுள்ள மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.12 லட்சம் முதல் ரூ.11.72 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

nissan magnite new model 2025

5. Citroen C3

சிட்ரோயன் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக துவங்குகின்ற சி3 காரில் 82hp பவர் 1.0 லிட்டர் 5 வேக மேனுவல், 110hp பவர் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 5 வேக மேனுவல், ஆட்டோமேட்டிக் என இரு எஞ்சின் ஆப்ஷனை கொண்டுள்ளது. 6 ஏர்பேக்குகளை பெறுகின்ற  காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.16 லட்சம் முதல் ரூ.10.27 லட்சம் வரை கிடைக்கின்றது.

citroen c3 2025 1

6. Hyundai Exter

சிறிய எஸ்யூவி மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலுக்கு போட்டியாக பிரசத்தி பெற்ற டாடா பஞ்ச் உள்ள நிலையில் 6 ஏர்பேக்குகளை பெற்றதாக விளங்கும் எக்ஸ்டரில் சிஎன்ஜி, பெட்ரோல் என இரு ஆப்ஷனை வழங்கும் 83hp பவர், 114Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ள மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 6.21 லட்சம் முதல் ரூ.10.51 லட்சம் வரை அமைந்துள்ளது.

exter hyundai

BMW m340i 50 Jahre Edition
பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் ‘Jahre’ எடிசன் விற்பனைக்கு வந்தது
ரூ.48.50 லட்சத்தில் டொயோட்டா கேம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் சிறப்புகள்
மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்
மஹிந்திராவின் Vision T கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்
மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது
TAGGED:Citroen C3Hyundai ExterHyundai Grand i10 NiosMaruti celerioNissan Magnite
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 yamaha rayzr 125 fi hybrid
Yamaha
யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம்,
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved