ஃபோர்டு நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பிக்கப் டிரக் மாடலான ரேஞ்சர் ராப்டர், இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியாகுவதற்கான வாயுப்புகள் உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்நிறுவனம் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்திய சந்தையில் பிக்கப் டிரக்குகளில் பிரீமியம் மாடலாக இசுசூ வி-கிராஸ் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், உயர் ரக பிக்கப் மாடலாக எண்டோவர் எஸ்யூவி காரின் அடிப்படையிலான ரேஞ்சர் ராப்டர், இந்திய சந்தையில் பல்வேறு இடங்களில் இருக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்ற இந்த பிக்கப் டிரக்கில் மிக சிறப்பான ஆஃப் ரோடு பயண அனுபவத்திற்கு ஏற்ப அம்சங்களுடன் அதிகபட்சமாக 203 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ், 800 மிமீ நீர் நிறைந்த இடங்களில் பயணிக்கும் போது எவ்வித சிரமும்மின்றி பயணிக்கலாம். மிக அகலமான 285 மிமீ டயர் இணைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் 2.0 லிட்டர் இரட்டை டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 213 ஹெச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இதில் 10-வேக தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டின் ரேஞ்சர் ராப்டரின் மிகச் சில யூனிட்டுகள் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இந்திய சந்தையில் 2500 யூனிட் ஹோமோலோகேஷன் இலவசமாக அனுமதிக்கப்படுவதனால் இறக்குமதி செய்யப்படும். 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஷோரூம்களை கிடைக்க வாய்ப்புள்ளது.