Automobile Tamilan

ஹோண்டா எலிவேட் முன்பதிவு ஆரம்பம், விலை அறிவிப்பு எப்பொழுது?

honda elevate adas sensing

மிக கடும் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் டெலிவரி துவங்கப்பட உள்ளதால், விலை அதற்கு முன்பாக அறிவிக்கப்பட உள்ளது.

தற்பொழுது ஹோண்டா டீலர்கள் மற்றும் ஹோண்டா ஃபரம் ஹோம் ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு கட்டணமாக ரூ.21,000 வசூலிக்கப்படுகின்றது. ஜூலை மாத இறுதியில் டெஸ்ட் டிரைவ் டீலர்களிடம் கிடைக்கலாம்.

Elevate SUV Launch date

ரூ.11 லட்சத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற எலிவேட் காருக்கு  ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட பல்வேறு எஸ்யூவிகளுடன் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.

ஹோண்டா எலிவேட் புகைப்படங்கள்

Exit mobile version