ஹூண்டாய் இந்தியாவின் ஆரம்ப நிலை செடான் சந்தையில் கிடைக்கின்ற ஆராவில் கூடுதலாக S AMT என்ற வேரியண்ட் அடிப்படையான பல வசதிகளை பெற்று ரூ.8.08 லட்சத்தில் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பிரசத்தி பெற்ற மாருதி சுசூகி டிசையர், டாடா டிகோர் என இரண்டையும் எதிர்கொள்கின்ற ஆரா காரில் தொடர்ந்து 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82bhp பவர் மற்றும் டார்க் 114Nm ஆக உள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி என இரு ஆப்ஷனுடன் கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனிலும் உள்ளது.
ஆரா எஸ் வேரியண்டில் அடிப்படையாக 6 ஏர்பேக்குகளை பெற்று ESC, Highline TPMS உள்ளிட்ட வசதிகளுடன் ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ஒருங்கிணைந்த டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய ஆட்டோ-ஃபோல்டிங் விங் மிரர் ஆகியவை உள்ளது.
15 அங்குல ஸ்டீல் வீல், USB மற்றும் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய 2-DIN ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங்-மவுண்டட் ஆடியோ கட்டுப்பாடுகள், 4 ஸ்பீக்கர்கள் உள்ளது.
2025 ஹூண்டாய் ஆரா விலை ரூ.6.34 லட்சம் முதல் ரூ.9.11 லட்சம் எக்ஸ்-ஷோரூம் வரை அமைந்துள்ளது.