
ஹூண்டாய் இந்திய சந்தையில் 26 மாடல்களை 2030க்குள் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், ஆஃப் ரோடு மாடலை உறுதிப்படுத்தியிருந்த நிலையில் ஆட்டோ மொபிலிட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் 2025யில் Crater என்ற கான்செப்ட்டை வெளியிட உள்ளதாக டிசைன் படங்களை வெளியிட்டுள்ளது.
CRATER Concept
CRATER கான்செப்ட் என்பது திறன் மற்றும் கடினத்தன்மையை உள்ளடக்கிய ஒரு சிறிய ஆஃப்-ரோடு எஸ்யூவி காட்சி வாகனமாகும். இது சாகச உணர்வை வெளிப்படுத்தும் வகையிலான வடிவமைப்பு, தீவிர ஆஃப் ரோடு சாலைகளுக்கான ஈர்க்கப்பட்டதாக கான்செப்ட் விளங்க உள்ளது.
கலிஃபோர்னியாவின் இர்வினில் உள்ள ஹூண்டாய் அமெரிக்கா தொழில்நுட்ப மையத்தில் (HATCI) உருவாக்கப்பட்ட மற்றும் ஐயோனிக் 5 XRT, சான்டா க்ரூஸ் XRT மற்றும் புதிய பேலசைட் XRT PRO உள்ளிட்ட ஹூண்டாயின் XRT உற்பத்தி வாகனங்களில் காணப்படும் அதே உற்சாகத்தையும் வலிமையையும் பெருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
;நவம்பர் 21-30 வரை நடைபெற உள்ள ஆட்டோ மொபிலிட்டி LA 2025 முதன்முறையாக கிரேடெர் கான்செப்ட் வெளியாக உள்ளது.