சமீபத்தில் க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டு மற்றும் கூடுதல் வேரியண்ட் வெளியான நிலையில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நைட் எடிசன் 42kwh மற்றும் 51.4kwh என இரண்டிலும் ரூ.21.45 லட்சம் முதல் ரூ.23.82 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலே உள்ள விலையுடன் கூடுதலாக ரூ.73,000 வரை வீட்டு சார்ஜர் மற்றும் பொருத்துவதற்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது.
வழக்கம் போல ஹூண்டாய் நிறுவன Knight Edition போல இந்த காரிலும் வெளிப்புறத்தில் மேட் கருமை நிற ஹூண்டாயின் லோகோ உட்பட அனைத்திலும் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கருப்பு அலாய் வீல், சிவப்பு பிரேக் காலிப்பர், கருப்பு நிற முன், பின்புற ஸ்கிட் பிளேட்டு, கருப்பு ORVMS மற்றும் பக்கவாட்டில் சில் கார்னிஷ், மற்றும் நைட் லோகோ உள்ளது. இன்டீரியரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிராஸ் நிற இன்ஷர்ட்கள் உள்ளது.
கிரெட்டா மின் வாகனத்தில் 42kwh பேட்டரி மாடல் முன்பாக 390கிமீ சான்றிதழ் பெறப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 420 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்து, டாப் வேரியண்டில் 51.4Kwh உள்ள நிலையில் முன்பு 473 கிமீ ஆக இருந்த நிலையில் 510 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.