Categories: Car News

கிரெட்டாவின் எலக்ட்ரிக் அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாய்

creta suv teased

இந்தியாவில் பரவலாக எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட உள்ளதாக தலைமை செயல் அதிகாரி தருண் கர்க் உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய புதிய கிரெட்டா எலக்ட்ரிக் காரைப் பொறுத்தவரை இந்திய சந்தையில் வரவுள்ள மாருதி சுசூகி முதல் எலக்ட்ரிக் காரான eVX இதைத்தவிர டாடா மோட்டார்ஸ் கர்வ் இவி, எம்ஜி ZS EV,  உள்ளிட்ட மாடல்களுடன் விண்fபாஸ்ட் நிறுவனத்தின் புதிய VFe34 போன்ற பல்வேறு மாடல்களுடன் சந்தையை பகிர்ந்து கொள்ள உள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள ICE கிரெட்டா காரிலிருந்து சிறிய மாறுபட்ட வெளிப்புற ஸ்டைலிங் மற்றும் பல்வேறு டிசைன் மாற்றங்கள் கொண்டதாக அமைந்திருக்க உள்ள மாடலின் இன்டிரியர் தற்பொழுதுள்ள டிசைனில் சிறிய மாற்றங்கள் மட்டும் பெற்றிருக்கலாம். மற்றபடி, கிரெட்டா EV எஸ்யூவி காரில் 48kwh மற்றும் 65kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன் பெற்று 400 கிமீ முதல் 550 கிமீ வரை ரேஞ்ச் வெளிப்படுத்தலாம்.

ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா காருக்கான பேட்டரியை உள்நாட்டிலே எக்ஸ்டை நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதால் விலை மிகவும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.