Categories: Car News

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

Hyundai-Exter-onroad-price-2024

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில் வெளியிடப்பட்டிருக்கின்றது. S(O)+ வேரியண்ட் ரூ.7.86 லட்சத்திலும், S+ AMT வேரியண்ட் ரூ.8.44 லட்சம் விலையில் துவங்குகிறது.

இந்தியாவின் மிகக் குறைவான விலையில் சன்ரூஃப் வழங்குகின்ற டாடா அல்ட்ரோஸ் காருக்கு அடுத்தபடியாக தற்பொழுது எக்ஸ்ட்ர் மாடல் இணைந்திருக்கின்றது. மேலும் இந்த மாடல் 83hp, 114Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை தொடர்ந்து பெற்றுக் கொள்கின்றது. இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது. மற்றபடி, எஞ்சின் ஆப்ஷனில் எந்த ஒரு மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

இந்த வேரியண்டில் மற்ற வசதிகளை பொருத்தவரை டிஜிட்டல் கிளஸ்டர் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் போன்றவை எல்லாம் பெற்று இருக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்களில் எக்ஸ்டர் காரில் 6 ஏர்பேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், TPMS, ESC, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ABS மற்றும் EBD ஆகியவை உள்ளன.