பிரசத்தி பெற்ற சிறிய ரக எஸ்யூவி மாடலான ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கூடுதலாக புரோ பேக் என்ற பெயரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக EX, EX(O), S Smart, S வேரியண்டுகளை தவிர மற்ற அனைத்து வேரியண்டிலும் புரோ பேக் ஆனது ரூ.5,000 வரை விலை கூடுதலாக அமைந்து ஆக்செரீஸ் சார்ந்த அம்சங்களை பெற்றுள்ளது.
குறிப்பாக வீல் ஆர்ச் கிளாடிங்கிற்கு மேல் ஒரு கூடுதல் அம்சமாக சேர்க்கப்பட்டு சற்று முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டதாக உள்ள நிலையில் புதிய சாம்பல் நிற பக்க சில் அலங்காரத்தையும், புதிதாக டைட்டன் மேட் கிரே என்ற நிறத்தைப் பெறுகிறது.
மற்றபடி வேறு எவ்விதமான கூடுதல் வசதிகளும் இல்லை, புதிதாக தற்பொழுது SX(O) AMT வேரியண்டிலிருந்து டேஸ்கேம் சேர்க்கப்பட்டுள்ளது. எக்ஸ்டரின் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் வழங்கப்படுகின்றது.
எக்ஸ்டர் புரோ பேக்கின் ஆரம்ப விலை ரூ.7.98 லட்சம் முதல் ரூ.10.20 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை அமைந்துள்ளது.
1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலில் 83 hp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த காரிலும் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.
69PS பவர் மற்றும் 95NM டார்க் வெளிப்படுத்தும் 1.2லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டு சிஎன்ஜி பயன்முறையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டு மைலேஜ் 27.1 km/kg ஆக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.