Categories: Car News

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் காரில் Hy-CNG Duo அறிமுகம்

Hyundai grand i10 nios Hy CNG duo

சமீபத்தில் எக்ஸ்டர் காரில் ஹூண்டாய் நிறுவனம் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் முறையை அறிமுகம் செய்த நிலையில் தற்போது கிராண்ட் i10 நியோஸ் கார் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி முறையானது மிகச் சிறப்பான வகையில் பின்புற பூட் ஸ்பேஸை பராமரிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் ஒரு அம்சமாகும். இது ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இது போன்ற நுட்பத்தைத்தான் தனது சிஎன்ஜி மாடல்களில் பயன்படுத்திய வருகின்றது அதற்கு போட்டியாக தான் ஹூண்டாய் நிறுவனமும் இந்த நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

எக்ஸ்டர் போலவே இந்த காரிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சிஎன்ஜி ஆப்ஷனில் 6000rpm-ல் 69 ps பவர் மற்றும் 4000rpm-ல் 95.2 Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வந்துள்ளது.

கிராண்ட் i10 NIOS மாடலில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி ரண்ணிங் விளக்கு மற்றும் எல்இடி டெயில் லேம்ப், கூரை தண்டவாளங்கள், சுறா துடுப்பு ஆண்டெனா, 20.25 செமீ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுட்வெல் லைட்டிங், பின்புற ஏசி வென்ட்கள், டில்ட் ஸ்டீயரிங் மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் பொறுத்தவரை இந்த ஹேட்ச்பேக்கில் 6 ஏர்பேக்குகள் தரநிலை, TPMS ஹைலைன், பின்புற பார்க்கிங் கேமரா, பகல் மற்றும் இரவு IRVM, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC) மற்றும் பல போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. Hy-CNG Duo உடன், நியோஸ் Hy-CNG (சிங்கிள் சிலிண்டர்) மாடலும் கிடைக்கும்.

Grand i10 Nios HY-CNG duo Magna – ₹ 7,75,300

Grand i10 Nios HY-CNG duo Sportz – ₹ 8,30,000

(ex-showroom)

கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கிராண்ட் i10 நியோஸ் ஆனது தற்பொழுது வரை நான்கு லட்சத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

1 day ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

1 day ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

1 day ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

1 day ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

2 days ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

2 days ago