Automobile Tamilan

ஜனவரி 2025-ல் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் விற்பனைக்கு வெளியாகிறது.!

hyundai creta ev launchsoon

வரும் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதமான ஜனவரியில் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான மாடலாக க்ரெட்டா இவி அறிமுகம் செய்யப்பட உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் கூட்டத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி (சிஇஓ) தருண் கார்க் பேசுகையில், அடுத்த காலண்டர் (2025 ஆம்) ஆண்டின் முதல் மாதத்தில் மின்சார க்ரெட்டா உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். கூடுதலாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் அன்சூ கிம், க்ரெட்டா EV மிக சிறந்த மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

எனவே, ஜனவரி 17 முதல் 22 வரை நடைபெற உள்ள 2025 ஆட்டோ எக்ஸ்போ இனி பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு விலை அறிவிக்கப்படலாம்.

க்ரெட்டா இவி காரில் 45 kWh மற்றும் 60 kWh பேட்டரி பேக் என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்ற மாடல் 400 கிமீ முதல் 600 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம்.

இந்த மாடலுக்கு போட்டியாக ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற டாடாவின் கர்வ்.இவி, எம்ஜி ZS EV, மஹிந்திராவின் எக்ஸ்யூவி 400 போன்ற மாடல்கள் உடன் புதிதாக வரவுள்ள மாருதி சுசுகி முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி இ விட்டாரா மற்றும் டொயோட்டாவின் அர்பன் போன்ற மாடல்கள் கடுமையான சவாலினை ஏற்படுத்த உள்ளது.

Exit mobile version