Automobile Tamilan

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

hyundai aura cng

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

ஹூண்டாய் ஆரா Hy-CNG E மாடலில் 1.2L Bi-Fuel பெட்ரோல் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு 6000 rpm-ல் 50.5 kW (69 PS) பவர், 95.2 Nm டார்க் வழங்குகிறது. இந்த மாடலின் மைலேஜ் கிலோ ஒன்றுக்கு 28.4 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் பவர் ஜன்னல்கள், டிரைவர் இருக்கை உயரம் சரிசெய்தல், சரிசெய்யக்கூடிய பின்புற இருக்கை ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 3.5”அங்குல கிளஸ்ட்டர் உட்பட. செடான் ஸ்டைலான Z-வடிவ எல்இடி டெயில்லேம்ப் கொண்டுள்ளது.

6 ஏர்பேக்குகள், 3 பாயின்ட் சீட் பெல்ட்கள் (அனைத்து இருக்கைகள்), சீட் பெல்ட் நினைவூட்டல் (அனைத்து இருக்கைகள்) மற்றும் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. சிஎன்ஜி, கசிவு இல்லாத வடிவமைப்பு, சிஎன்ஜி சுவிட்ச் மற்றும் பெட்ரோல் நிரப்பும் பகுதிக்கு அருகில் வசதியான சிஎன்ஜி எரிபொருள் நிரப்பும் முனை ஆகியவற்றுடன் வழங்குகிறது.

(Ex-showroom).

Exit mobile version