ஹூண்டாய் வென்யூ SUV என்ஜின், மைலேஜ் விபரம் ஒரு பார்வை

இந்திய ஹூண்டாயின் புதிய சப் காம்பாக்ட் ரக எஸ்யூவி மாடலான வென்யூ SUV காரில் மொத்தம் மூன்று என்ஜின் ஆப்ஷன் மற்றும் நான்கு விதமான கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனைக்கு வெளியாக உள்ளது.

இந்த வென்யூ காரில் 33 வகையான ஸ்மார்ட் டெக் அம்சங்களை உள்ளடக்கிய BlueLink technology அம்சத்துடன் 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி ஆக விளங்குகின்றது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்றவை சவாலாக விளங்க உள்ளது.

ஹூண்டாய் வென்யூ SUV என்ஜின்

ஸ்டைலிஷான எஸ்யூவி மாடலாக விளங்கும் வென்யூ காரில் இரண்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒரு டீசல் என்ஜின் கொண்டதாக விளங்குகின்றது.

மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகின்ற டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்றதாக விளங்குகின்றது. புதிய 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆட்டமேட்டிக் என்ஜின் ஆப்ஷனை இந்த என்ஜின் மட்டும் பெற்றுள்ளது.

அடுத்த பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் உள்ள ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும்.

ஒரே ஒரு டீசல் என்ஜின் தேர்வினை மட்டும் வழங்குகின்றது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை பெற்றதாக விளங்குகின்றது. இந்த என்ஜினில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

ஆராய் (Automotive Research Association Of India (ARAI) மையத்தால் வழங்கப்பட உள்ள தரச்சான்றிதழ் வழங்கும் சோதனையில் வென்யூ SUV காரின் மைலேஜ் விபரம் அறிவிக்கப்பபட்டுள்ளது.

வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ (மேனுவல்) மற்றும் 18.15 கிமீ (ஆட்டோமேட்டிக்)

வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.52 கிமீ (மேனுவல்)

வென்யூ 1.4 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.70 கிமீ (மேனுவல்)

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை பட்டியல்

பெட்ரோல்
Hyundai Venue 1.2 Kappa E MT- ரூ. 6.50 லட்சம்
Hyundai Venue 1.2 Kappa S MT – ரூ. 7.20 லட்சம்
Hyundai Venue 1.0 GDI S MT- ரூ. 8.21 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX MT- ரூ. 9.54 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX (O) MT- ரூ. 10.60 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX DCT- ரூ. 9.35 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX+ DCT- ரூ. 11.10 லட்சம்

டீசல்
Hyundai Venue 1.4 CRDI E MT- ரூ. 7.75 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI S MT- ரூ. 8.45 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI SX MT- ரூ. 9.78 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI SX (O) MT- ரூ. 10.80 லட்சம்