Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

220 கிமீ ரேஞ்சு பெற்று புதிய ஸ்டைலில் ரெனால்ட் க்விட் எலக்ட்ரிக் அறிமுகமானது

by ராஜா
21 February 2024, 1:52 pm
in Car News
0
ShareTweetSend

ரெனால்ட் கீழ் செயல்படுகின்ற டேசியா வெளியிட்டுள்ள புதிய ஸ்பிரிங் (Dacia Spring) எலக்ட்ரிக் ஆனது க்விட் இவி (Kwid EV) என்ற பெயரில் விற்பனைக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. க்விட் இந்தியாவில் பிரபலமான காராக விளங்கும் நிலையில் துவக்கநிலை சந்தைக்கு ஏற்ற எலக்ட்ரிக் மாடலாக வரக்கூடும்.

Dacia Spring revealed

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட எஸ்யூவி கார்களுக்கு இணையான தோற்றத்தை கொண்டுள்ள டேசியா ஸ்பிரிங் காரில் 44bhp அல்லது  64bhp என இரண்டு விதமான பவரை வழங்குகின்ற எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு 26.8kWh பேட்டரி பேக் ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ளது.

இரண்டு விதமான பவரை வழங்கினாலும் இந்த காரின் ரேஞ்ச் 220 கிமீ வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  44bhp பவரை வழங்கும் மாடல் அதிகபட்சமாக 11kW (AC) வரை  விரைவு சார்ஜ்ரை ஆதரிக்கும் நிலையில், டாப் 64bhp வேரியண்டுகள் 30kW DC விரைவு சார்ஜ்ரை ஆதரவினை பெறுகின்றன. கூடுதலாக 7.4kW ஹோம் வால்பாக்ஸில் சார்ஜ் செய்ய நான்கு மணிநேரமும், வழக்கமான 3 பின் பிளக் மூலம் சார்ஜ் செய்தால் 11 மணிநேரம் ஆகும்.

Dacia Spring ev

தோற்ற அமைப்பில் முந்தைய மாடலை விட டேசியா ஸ்பிரிங் மேம்படுத்தப்பட்டாகவும், கிரில் புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் மற்றும் நேர்த்தியான பம்பர் கொடுக்கபட்டுள்ளது. புதிய அலாய் வீல் கொண்டுள்ளது. பின்புறம் Y-வடிவ டெயில் விளக்குகளைப் பெறுவதுடன் மேட் கருப்பு பிளாஸ்டிக் பேனலால் இணைக்கப்பட்டுள்ளன. டேசியா டஸ்ட்டரில் உள்ளதை போன்றே இன்டிரியரை பெற்றதாகவும் டாப் வேரியண்டில் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றதாக அமைந்துள்ளது.

இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் க்விட் அடிப்படையில் விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கலாம்.

dacia spring ev interior dacia spring ev rear

Related Motor News

10வது ஆண்டு க்விட் சிறப்பு எடிசனை வெளியிட்ட ரெனால்ட்

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி.., ரெனால்ட் கார்கள் விலை ரூ.96,395 வரை குறைப்பு

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

புதிய டிசைனுடன் வரவுள்ள 2025 ரெனால்ட் ட்ரைபர் டீசர் வெளியானது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ரெனால்ட் நிசான் இந்திய கூட்டு ஆலையை ரெனால்ட் கையகப்படுத்துகின்றது

Tags: Dacia SpringRenaultRenault Kwid
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 மஹிந்திரா தார்

நவீன அம்சங்களுடன் 2025 மஹிந்திரா தார் விலை ₹ 9.99 லட்சம் முதல் துவக்கம்.!

சிட்ரோயன் ஏர்கிராஸ் X

ரூ.8.29 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோயன் ஏர்கிராஸ் X விற்பனைக்கு வெளியானது

Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா

Upcoming Mahindra SUV’s : விரைவில்., மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட இரண்டு எஸ்யூவிகள் அறிமுகம்

பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பினை உறுதி செய்த சிட்ரோயன் ஏர்கிராஸ்

ஜேஎஸ்டபிள்யூ மோட்டாரின் முதல் கார் அறிமுகம் எப்பொழுது.!

ரூமியன் எம்பிவி காரில் 6 ஏர்பேக்குகளை சேர்த்த டொயோட்டா

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan