கூடுதல் ஆக்செரீஸ் மற்றும் பாடி கிராபிக்ஸ் பெற்று ட்ரெயில் எடிசன் என்ற பெயரில் ஜீப் காம்பஸ் மற்றும் மெர்டியன் எஸ்யூவிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த பதிப்பில் வருடாந்திர சர்வீஸ் பராமரிப்பு திட்டம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
Jeep Compass and Meridian Trail Edition
- Compass Trail MT: ரூ. 25.41 லட்சம்
- Compass Trail AT: ரூ. 27.41 லட்சம்
- Meridian Trail MT: ரூ. 31.27 லட்சம்
- Meridian Trail AT: ரூ. 35.27 லட்சம்
- Meridian Trail AT 4×4: ரூ. 37.27 லட்சம்
Meridian Limited (O) வேரியண்டின் அடிப்படையில் வந்துள்ள ட்ரெயில் எடிசனில் ரூபி சிவப்பு தையல் நிறத்துடன் கருப்பு இன்டீரியருடன் மிக நேர்த்தியான வண்ணத்தை கொண்டதாக அமைந்துள்ளது. மேலும் வெளிப்புறத்தில் பேட்ஜிங், மற்றும் பல்வேறு இடங்களில் ட்ரெயில் எடிசன் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.
Compass Longitude (O) வேரியண்டின் அடிப்படையில் கிரானைட் மெட்டாலிக் டூயல்-டோன் அலாய் வீலுடன் மேட் கருப்பு கிரில் கொண்ட இன்ஷர்ட் மற்றும் சிவப்பு தையல் உடன் தனித்துவமான அப்ஹோல்ஸ்டரி உள்ளது.
புதிய ‘ஜீப் டிரஸ்ட்’ திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் சார்ந்த தேவைகளுக்கு கூடுதல் மன அமைதியை வழங்குகிறது. காம்பஸ் ட்ரெயில் வாங்குபவர்களுக்கு 3 வருட இலவச வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் (AMC), 5 வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் ரூ.20,000 நேரடி பணப் பலன் கிடைக்கும். மெரிடியன் டிரெயில் பதிப்பு வாங்குபவர்கள் தொகுப்பின் ஒரு பகுதியாக 3 வருட இலவச AMC பெறுவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.