Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

பிரீமியம் வசதிளுடன் கியா வெளியிட்ட காரன்ஸ் கிளாவிஸ் சிறப்புகள்

By MR.Durai
Last updated: 8,May 2025
Share
SHARE

கியா காரன்ஸ் கிளாவிஸ்

கியா இந்தியாவின் புதிய மாடலாக ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற காரன்ஸ் எம்பிவி காரின் அடிப்படையில் பிரீமியம் வசதிகளுடன் காரன்ஸ் கிளாவிஸ் என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடல் சந்தையில் உள்ள காரன்ஸ் காரை விட கூடுதலான வசதிகள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் நவீன தலைமுறை விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பிரீமியம் விலையில் அநேகமாக ரூபாய் 11 லட்சத்துக்கும் கூடுதலாக துவங்கி டாப் வேரியன்ட் ரூபாய் 20 லட்சத்துக்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Kia Carens Clavis

இந்நிறுவனத்தின் பிரீமியம் மின்சார கார்களின் டிசைனை பகிர்ந்து கொண்டுள்ள காரன்ஸ் கிளாவிஸ் காரில் முகப்பில் புதிய பம்பருடன் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள காரின் பக்கவாட்டு தோற்றத்தில் 17 அங்குல புதிய டிசைனை பெற்ற அலாய் வீல் பெற்றுள்ளது.

பி்ன்புறத்தில் எல்இடி லைட் பாருடன் எல்இடி டெயில் விளக்குடன் பின்புற பம்பர் மிகவும் ஸ்போர்ட்டிவாக அமைந்துள்ள கிளாவிசில் ஐவரி சில்வர் கிளாஸ், பியூட்டர் ஆலிவ், இம்பீரியல் ப்ளூ, கிளேசியர் வெள்ளை பேரல், கிராவிட்டி கிரே, ஸ்பார்க்கிளிங் சில்வர், அரோரா கருப்பு பேரல்  மற்றும் கிளியர் ஓயிட் ஆகியவற்றை பெற்றுள்ளது.

காரன்ஸ் கிளாவிஸ்

காரன்ஸ் கிளாவிஸ் இன்டீரியர் வசதிகள்

சமீபத்தில் வந்த செல்டோஸ் மற்றும் சிரோஸ் கார்களில் இருந்து பெறப்பட்டுள்ள 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை பெற்றுள்ளது.

மிகப்பெரிய பனரோமிக் சன்ரூஃப் பெற்றுள்ள கேரன்ஸ் கிளாவிஸ் காரில் ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் பெற்று புதிய ஆட்டோ ஏசி வென்ட் ஆகியவற்றை டாப் வேரியண்ட் பெற்றுள்ளது.

kia carens clavis dashboard

கிளாவிஸ் எஞ்சின் ஆப்ஷன்

1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.

இறுதியாக, காரன்ஸ்  டீசல் காரில் 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.

கிளாவிஸ் விலை எவ்வளவு ..?

கியா கிளாவிஸ் எம்பிவி காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ.25,000 வசூலிக்கப்படும் எனவும், முன்பதிவு மே 9 ஆம் தேதி 12.01 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரன்ஸ் கிளாவிஸ் விலை ரூ.11 லட்சத்தில் துவங்லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாளர் இல்லையென்றாலும் இன்னோவா, மாருதி XL6 உள்ளிட்ட மாடல்களை  எதிர்கொள்ள உள்ளது.

kia காரன்ஸ் கிளாவிஸ்

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Kia CarensKia Clavis
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
TVS-X scooter-price
TVS
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
New Hero Glamour X 125 on road price
Hero Motocorp
ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved