கியா இந்தியாவின் பல்வேறு பிரீமியம் வசதிகளை பெற்ற புதிய காரன்ஸ் கிளாவிஸ் காரின் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ.21.49லட்சம் வரை அமைந்துள்ளது.
கிளாவிஸ் காரில் தொடர்ந்து 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.
இறுதியாக, காரன்ஸ் டீசல் காரில் 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.
முந்தைய கேரன்ஸ் மாடலை விட பல்வேறு பிரீமியம் வசதிகளை பெற்று தோற்ற அமைப்பில் நவீன கியா கார்களை போன்ற டிசைனை பெற்று எல்இடி விளக்குளை பெற்று டாப் வேரியண்டில் 17 அங்குல வீல் கொண்டுள்ளது.
10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை பெற்றுள்ளது.
Kia Carens Clavis Price list
- Carens Clavis HTE – ₹ 11,49,900
- Carens Clavis HTE (O) – ₹ 12,49,900
- Carens Clavis HTK – ₹ 13,49,900
- Carens Clavis HTK+ – ₹ 15,39,900
- Carens Clavis HTK+(O) – ₹ 16,19,900
- Carens Clavis HTX – ₹ 18,19,900
- Carens Clavis HTX+ – ₹ 19,39,900