Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

குறைந்த விலை 2024 கியா செல்டோஸ் ஆட்டோமேட்டிக் வெளியானது

by MR.Durai
1 April 2024, 9:07 pm
in Car News
0
ShareTweetSend

2024 கியா செல்டோஸ்

கியா வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான செல்டோஸ் காரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள HTK மற்றும் HTK+ வேரியண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான ஆப்ஷனிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வந்துள்ளது.

புதிய செல்டோஸ் HTK+ பெட்ரோல்-சிவிடியின் விலை ரூ.15.40 லட்சமாகவும், செல்டோஸ் HTK+ டீசல் ஆட்டோமேட்டிக் விலை ரூ.16.90 லட்சமாகவும் உள்ளது. கூடுதலாக துவக்க நிலை HTE வேரியண்டில் 5 நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

2024 கியா செல்டோஸ் பெற்ற மாற்றங்கள் பின் வருமாறு;-

  • துவக்க நிலை செல்டோஸ் HTE வகையில் அரோரா பிளாக் பேர்ல், கிராவிட்டி கிரே, இன்டென்ஸ் ரெட், பியூட்டர் ஆலிவ் மற்றும் இம்பீரியல் ப்ளூ என 5 வண்ணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
  • HTK வேரியண்டில் கூடுதலாக ஸ்டார் மேப் எல்இடி ரன்னிங் விளக்குகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் கொண்ட ஸ்மார்ட் கீ மற்றும் எல்இடி டெயில் பார் லைட் உள்ளது.
  • HTK+ வேரியண்டுகளில் டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப், டிரைவ் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் மோடு, பேடல் ஷிஃப்டர் மற்றும் ஸ்டார் மேப் எல்இடி பார் இணைக்கப்பட்ட டெயில்லேம்ப் பெற்றுள்ளது.
  • டாப் HTX, HTX+, GT Line மற்றும் X Line வகைகளில் கூடுதலாக தானாகவே மேல் ஏறும் மற்றும் இறங்க்கும் தன்மை பெற்ற வசதி 4 விண்டோஸ்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மற்றபடி, எந்த எஞ்சின் ஆப்ஷன் மாற்றமும் கியா செல்டோஸ் காரில் வழங்கப்படாமல் தொடர்ந்து 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது.

இந்தியாவில் கியா செல்டோசின் விலை ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.35 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை அமைந்துள்ளது. ஆட்டோமேட்டிக் வேரியண்ட் கூடுதலாக முந்தைய மாடல்களை விட குறைவான விலையில் துவங்குவதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையலாம்.

செல்டோஸூக்கு போட்டியாக ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் உள்ளன.

Related Motor News

2025 கியா செல்டோஸ் விலை ரூ.11.13 லட்சத்தில் துவங்குகின்றது.!

கியா சிரோஸ் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.!

க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கான செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி.!

டிசம்பர் 19ல் கியா சிரோஸ் அறிமுகமாகிறது..!

புதிய டீசரில் கியா சிரோஸ் பற்றி முக்கிய விபரங்கள்..!

கியாவின் அடுத்த எஸ்யூவி.., சிரோஸ் டீசர் வெளியீடு

Tags: KiaKia Seltos
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரித்த ஹூண்டாய் மோட்டார்

மாருதி சுசூகி விக்டோரிஸ்

ADAS உடன் மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகமானது

BNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ்

ADAS பாதுகாப்புடன் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு அறிமுகமா.?

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

2025 ஹோண்டா எலிவேட்டில் இன்டீரியர் மேம்பாடு மற்றும் கூடுதல் வசதிகள்

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan