Categories: Car News

ரூ.6.71 லட்சத்தில் கியா சொனெட் (Kia Sonet) எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

8b0db kia sonet launched

பிரசத்தி பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் நுழைந்துள்ள கியா சொனெட் (Kia Sonet) எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.6.71 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.11.99 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் வரவுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர், நிசான் மேக்னைட் இறுதியாக ரெனோ கைகெர் போன்ற மாடல்களை நேரடியாக எதிர்கொள்ளுகின்ற சொனெட்டில் மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என இருவிதமான பிரிவில் மொத்தமாக 17 விதமான மாறுபட்ட வேரியண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கியா சொனெட் விலை பட்டியல்

Kia Sonet prices (ex-showroom, India)
1.2P MT 1.0P iMT 1.0P DCT 1.5D MT 1.5D AT
HTE Rs 6.71 Rs 8.05 lakh
HTK Rs 7.59 lakh Rs 8.99 lakh
HTK+ Rs 8.45 lakh Rs 9.49 lakh Rs 10.49 lakh Rs 9.49 lakh Rs 10.39 lakh
HTX Rs 9.99 lakh Rs 9.99 lakh
HTX+ Rs 11.65 lakh Rs 11.65 lakh
GTX+ Rs 11.99 lakh Rs 12.89 lakh Rs 11.99 lakh Rs 12.89 Lakh

சொனெட் காரின் இன்ஜின் ஆப்ஷன்

ஹூண்டாயின் வென்யூ காரில் உள்ள இன்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற கியா சொனெட்டில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று இன்ஜின் பெற்று மேனுவல், டிசிடி, ஆட்டோ மற்றும் ஐஎம்டி என மாறுபட்ட கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

ஒவ்வொரு இன்ஜினும் வழங்குகின்ற பவர் மற்றும் டார்க் உட்பட ARAI அளித்த மைலேஜ் சான்றிதழ் விபரமும் பின்வரும் அட்டவனையில் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்

1.2 லிட்டர் பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

120PS

83PS

100PS/ 115PS

டார்க்

172Nm

115Nm

240Nm/ 250Nm

கியர்பாக்ஸ்

6-speed iMT/ 7-speed DCT

5-speed MT

6-speed MT/ 6-speed AT

மைலேஜ்

18.2km/l (iMT)/18.3km/l(DCT)

18.4 km/l

24.1km/l (MT)/19km/l(AT)

 

கியா சொனெட் காரின் பவர்ஃபுல்லான இன்ஜினாக 120ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 172 என்எம் டார்க் வழங்குவதுடன் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டிசிடி மட்டுமே பெறுகின்றது. இந்த மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் இல்லை.

1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 100 ஹெச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க் வழங்குவதுடன் fixed-geometry-turbo நுட்பத்தை கொண்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் variable-geometry பெற்று 115 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வழங்குகின்றது.

இறுதியாக, குறைந்த பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று 83ஹெச்பி பவர் மற்றும் 115என்எம் டார்க் வழங்குகின்றது.

இந்த மாடலில் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடு கொடுக்கப்பட்டுள்ளது. டிராக்‌ஷன் கன்ட்ரோல் அமைப்பினை பொறுத்தவரை , Snow, Mud மற்றும் Sand கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர் வசதிகள்

சோனெட் காரின் மிக நேர்த்தியான டேஸ்போர்டில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு UVO கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களில் 57க்கு அதிகமான வசதிகள் உள்ளன. ஆட்டோமேட்டிக் ஏசி வென்ட் கொடுக்கப்பட்டு, சென்டர் ஆர்ம் ரெஸ்ட், 7 ஸ்பீக்கர்களுடன் போஸ் சவுன்ட் சிஸ்டம், கோவிட்-19 வைரஸ் உட்பட கிருமிகளை தடுப்பிற்கான காற்று சுத்திகரிப்பு, டயர் பிரஷர் மானிட்டர், சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷன், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் கவனிக்கவேண்டியதாகும்.

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

1 day ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

1 day ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

2 days ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

2 days ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

2 days ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

2 days ago